ஹோட்டல் சுவையில் உதிரி உதிரியாக ‘வெஜ் புலாவ்’ வீட்டிலேயே எப்படி செய்யலாம்.? இதோ ரெசிபி..
உங்கள் வீட்டில் காய்கறிகள் உள்ளதா.? அப்படியானால் அந்த காய்கறிகளைக் கொண்டு ஹோட்டல் சுவையில் ஈஸியாக வெஜ் புலாவ் செய்யலாம். புலாவ் ஒரு சுவையான அரிசி உணவாகும். மேலும் வெஜ் புலாவ் செய்வது மிகவும் சுலபம்.
குறிப்பாக மதிய உணவாக குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்ப காலை வேளையில் ஈசியாக செய்ய ஏற்றதாக இருக்கும். காலையில் பரபரப்பான வேளைகளில் எவ்வாறு ஈஸியாக சுவையான வெஜ் புலாவ் செய்யலாம் என்ற செய்முறை இங்கே…
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி – 1 கப்
காய்கறிகள் (பட்டாணி, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு) – 1 கப்
வெங்காயம் – 2 மெல்லியதாக வெட்டப்பட்டது
பூண்டு – 2 பல் துண்டு துண்தாக வெட்டப்பட்டது
இஞ்சி – 1 அங்குல துண்டு இஞ்சி, துருவியது
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
உப்பு – சுவைக்கேற்ப
நெய் அல்லது எண்ணெய்
தண்ணீர் – 2 கப்
செய்முறை :
பாஸ்மதி அரிசியைக் இரண்டு மூன்று முறை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நெய் அல்லது எண்ணெய்யை சூடாக்கி அதில் சீரகம், கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
பிறகு மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், துண்டு துண்தாக வெட்டப்பட்ட இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற காய்கறிகளைச் சேர்த்து (பட்டாணி, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு) சில நிமிடங்கள் வதக்கவும்.
அனைத்து காய்கறிகளும் வதங்கியவுடன் ஊறவைத்த அரிசியைக் தண்ணீர் வடிகட்டி அதில் சேர்த்து கலந்துகொள்ளவும்.
அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கடாயை முடி சமைக்கவும்.
அரிசி நன்கு மென்மையாக வெந்தவுடன் இறக்குவதற்கு முன் தேவையென்றால் சிறிது நெய் சேர்த்து கலந்தால் சுவையான வெஜ் புலாவ் ரெடி.