கிச்சன் கீர்த்தனா : சாக்லேட் சேமியா
என்ன தேவை?
பால் – 800 மில்லி
சாக்லேட் – 75 கிராம்
சேமியா – 50 கிராம்
பொடித்த சர்க்கரை – 75 கிராம்
வெனிலா எசென்ஸ் – 3 சொட்டு
எப்படிச் செய்வது?
மொத்தம் உள்ள பாலில், முக்கால் பங்கு பாலைக் காய்ச்சவும். அதில் சேமியாவைப் போட்டு வேகவிடவும். மீதி பாலில், ‘சாக்லேட்’டைத் துருவி அதனுடன் சேர்த்து நன்கு சூடாக்கவும். மிதமான தீயில் வைத்து சூடாக்கும்போது சாக்லேட் சீராக உருகும். மொத்தமும் உருகி நன்கு
கலந்ததும் வேகவைத்த சேமியா பால் கலவையுடன் சேர்த்து அத்துடன் பொடித்த சர்க்கரை, வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்க, சாக்லேட் சேமியா தயார்.