டீ டைம் ஸ்நாக்ஸுக்கு ஏற்ற சமோசா.. வீட்டிலேயே செய்ய ரெசிபி…

எப்போதும் கடைகளிலேயே வாங்கி உண்ணும் இந்த சமோசாவை வீட்டிலேயே ஆரோக்கியமாகவும், சுவை நிறைந்ததாகவும் வீட்டிலேயே எப்படி எளிதாக செய்யலாம் என்று இங்கே காணலாம்…

தேவையான பொருட்கள் :

    • மைதா மாவு – 2 கப்
    • வேகவைத்து பிசைந்த உருளைக்கிழங்கு – 2 கப்
    • வேகவைத்து பிசைந்த பச்சை பட்டாணி – 1/2 கப்
    • சிவப்பு மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
    • கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி
    • சீரகம் – 1 தேக்கரண்டி
    • நெய் – 1/4 கப்
    • உப்பு – தேவைக்கேற்ப
  • எண்ணெய்

செய்முறை :

ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, சிறிதளவு உப்பு மற்றும் உருக்கிய நெய் சேர்த்து கலந்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

தற்போது பிசைந்து வைத்துள்ள மாவை 30 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.

அடுத்து அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின்பு வேகவைத்த உருளைக்கிழங்கை தோலுரித்து அதனுடன் பச்சை பட்டாணி சேர்த்து நன்கு மசித்து வைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தைப் போட்டு பொரிக்கவும்.

சீரகம் பொரிந்தவுடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியுடன் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

அனைத்தும் நன்கு வதங்கியவுடன் அடுப்பை அனைத்து மசாலாவை எடுத்து தனியே ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொள்ளவும்.

பின்பு பிசைந்து வைத்துள்ள மாவின் சிறிய பகுதியை சமோசா செய்ய எடுத்து அதை சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டங்களாக தேய்த்து கொள்ளுங்கள்.

வட்டமாக தேய்த்த மாவை பாதியாக வெட்டி முக்கோண வடிவில் மடித்துக்கொள்ளுங்கள்.

பிறகு அதில் உருளைக்கிழங்கு-பட்டாணி கலவையை வைத்து நிரப்பி ஓரங்களை மூடிக்கொள்ளுங்கள்.

தற்போது அடுப்பில் வாணலியை வைத்து சமோசா பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

இரண்டு புறமும் நன்றாக பொன்னிறமாக வெந்தவுடன் சமோசாவை எடுத்து சூடாக பரிமாறவும்.

இந்த சுவையான சமோசாக்களை மாலை நேரங்களில் சூடான டீக்களுடன் அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்…

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *