தே சிய கீதத்தின் போது தள்ளி நின்ற வீரர்கள்.. விக்கெட் கொண்டாடத்திலும் புறக்கணிப்பு – கேமரூன் கிரீனுக்கு ஏன் இந்த நிலை தெரியுமா?
ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது ஜனவரி 25-ஆம் தேதி நேற்று பிரிஸ்பேன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து தங்களது முதல் இன்னிங்சில் 311 ரன்களை குவித்தது.
அதன் பின்னர் தற்போது ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் தேசிய கீதம் பாடும்போது மற்ற வீரர்களை விட்டு தள்ளி நின்றார்.
அதேபோன்று பீல்டிங் செய்கையிலும் விக்கெட் கொண்டாட்டத்தின் போதும் சக வீரர்களிடம் இருந்து தூரமாகவே இருந்து வந்தார். இது குறித்த சில வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில் அதற்கான காரணம் யாதெனில் : நடைபெற்று வரும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி போட்டிக்கு முன்பாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டதால் அவர் சமூக இடைவெளியை கடைபிடித்து விளையாடி வருகிறார்.