19 வயதுக்கு உட்பட்டோர் உலகக்கோப்பை போட்டியில் சதமடித்து அசத்திய ராசியில்லா வீரரின் தம்பி – விவரம் இதோ

ஐசிசி-யின் 19 வயதுக்குட்பட்டோர் ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த உலகக் கோப்பை தொடருக்காக நான்கு குரூப்பின் அடிப்படையில் 16 அணிகள் இடம் பெற்று மோதி வருகின்றனர். இந்த 19 வயதுக்கு உட்பட்டோர் அணிக்காக அசத்தும் வீரர்களுக்கு தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இளம்வீரர்களுக்கு இது முக்கிய தொடராக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த உலகக்கோப்பை சுற்றின் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருக்கும் இந்திய அணியானது நேற்று ஜனவரி 25-ஆம் தேதி தங்களது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 301 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் இந்திய அணி இப்படி மிகப்பெரிய ரன் குவிப்பிற்கு செல்ல மிக முக்கியமான காரணமாக 18 வயது வீரர் முஷீர் கான் திகழ்ந்தார்.

இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் 106 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 118 ரன்கள் குவித்தார். இப்படி அசத்தலான ஆட்டத்தை ஆடி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த இந்த வீரர் வேறு யாருமில்லை :

இந்திய அணியின் வாய்ப்புக்காக தொடர்ச்சியாக காத்திருக்கும் ராசியில்லாத வீரராக பார்க்கப்படும் சர்பராஸ் கானின் சகோதரர் தான். தற்போது 26 வயதாகவும் சர்பராஸ் கான் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தியிருக்கும் வேளையில் அவரது தம்பியான முஷீர் கான் 19 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *