“என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்…” கதறிய பாரதிராஜா!
இளையராஜாவின் இசை பல படங்களில் பேசப்பட்டாலும், பாரதிராஜாவின் படங்களில் பாடல்கள் வசீகரிக்கும் விதமாகவும், பின்னணி இசையும் மிரட்டலாகவும் இருக்கும். சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த நண்பர்கள் சமீபத்தில் தான் மீண்டும் பேச துவங்கினார்கள். இந்நிலையில், நேற்று பவதாரிணி காலமான செய்தி கேட்டு, ‘என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்…’ என்று சோகமாக இயக்குநர் பாரதிராஜா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர், பாடகி பவதாரணி, பிறந்து, வளர்ந்ததில் இருந்தே பார்த்தவர் பாரதிராஜா. பாரதிராஜாவின் குடும்பத்தில் ஒருவராக தான் பவதாரிணி இருந்துள்ளார். இளையராஜாவும், பாரதிராஜாவும் பேசிக் கொள்ளாத காலங்களிலும் கூட, யுவன், பவதாரிணி போன்றோர் பாரதிராஜா குடும்பத்தினருடன் பேசி, பழகி வந்துள்ளனர். இந்நிலையில், புற்றுநோய் சிகிச்சைக்காக இலங்கையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடகி பவதாரிணி நேற்று சிகிச்சை பலனளிக்காமல் காலமானது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.