“மயில் போல பொண்ணு ஒன்னு…” தேசிய விருது பாடகி பவதாரணி காலமானார்!
5 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதன் காரணமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார்..இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.20 மணியளவில் இறந்தார்.அவரது கணவர் ஹோட்டல் தொழில் செய்து வருகிறார். அவருடைய இசை உலகில் சாதித்ததை சற்று பார்ப்போம்..
பவதாரணி, திரை பின்னணி பாடகி, இசையமைப்பாளர், இளையராஜவின் மகள், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி. இவர் அதிகளவில் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டும் பாடியுள்ளார். ஆனால், இவரது குரல் மிகவும் வித்யாசமானதாக இருக்கும். இவர் இளையராஜா இசையில் பாரதி படத்தில் பாடிய மயில்போல பொண்ணு ஒண்ணு பாடலுக்கு இவருக்கு சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.
ராசய்யா அப்படீங்கற படத்தில் இவர் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அந்தப்பாடல் பெரிய ஹிட்டானதையடுத்து, இவர் தொடர்ந்து தனது தந்தை மற்றும் சகோதரர்களின் இசையமைப்பில் பாடல்கள் பாடினார். தேவா, சிற்பி ஆகியோருக்கும் பாடி இருக்கார். இவர் நடிகை ரேவதி இயக்கிய மித்ர் மை பிரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் இவர் தெலுங்கு பட உலகில் நுழைந்தார். இவர் ரேவதி இயக்கிய பிர் மிலேங்கே படத்திற்கும் இசையமைத்தார். இவர் வெள்ளிச்சி என்ற கிராமப்புற இசைக்கு நல்ல பெயர் வாங்கினார்.