பகீர் வீடியோ.. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியின் தலைமுடியை இழுத்து பிடித்து தள்ளிய பெண் போலீஸ்..!
இதை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்புடைய அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், அந்த அமைப்பைச் சேர்ந்த மாணவி ஒருவரை தெலுங்கானா போலீஸார் துரத்திச் சென்று அவரது முடியால் இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவர் சில படிகள் தள்ளி ஓடுகிறார். அவரை 2 பெண் போலீசார் ஸ்கூட்டியில் துரத்தியுள்ளனர்.
அப்போது பின்னால் அமர்ந்திருந்த பெண் போலீசார் மாணவியின் நீண்ட தலைமுடியை பிடித்து இழுத்துள்ளனர். இதனால் மாணவி கீழே விழுந்துள்ளார். ஸ்கூட்டி சிறிது தூரம் சென்று நிற்கிறது. பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர்களில் ஒருவரான கவிதா, இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, சமூக வலைதளங்களில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியை இழுத்துச் சென்றது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கு தெலுங்கானா போலீசார் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இது தொடர்பில் துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.