தொலைக்காட்சி நிருபர் தாக்கப்பட்டதை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் போராட்டம்….!

இதனால் சந்தேகம் அடைந்த பிரபு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் தஞ்சம் அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மேலாளர் அறையில் அவரை சுற்றி வளைத்த மர்ம கும்பல் கண்ணாடியை உடைத்து தாக்கியது.

பின்னர் செய்தியாளர் பிரபுவை சரமாரியாக வெட்டிய கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியது. காயமடைந்த பிரபு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறை அவசர எண்ணைத் தொடர்பு கொண்ட செய்தியாளர், கடந்த சில நாட்களாக தன்னை சிலர் பின்தொடர்வதாக புகார் அளித்தார்.

ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. காவல்துறையின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியது. இதற்கிடையே தாக்குதல் நிகழும் சற்று முன் கூட காவல்துறையினரிடம் செய்தியாளர் நேசபிரபு பாதுகாப்பு கோரும் செல்போன் பேச்சும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அவர், “அவனுன்ஹ்க வராணுங்க சார்… எத்தனை தடவை பார்க்க? பல்லடம் போலீசில் சொல்லி கைது செய்யச் சொல்லுங்க சார். எல்லா கேமராக்களும் முகத்தோட இருக்கு. இந்த பெட்ரோல் பம்பிலும் கேமரா இருக்கும். எதுவும் நடக்கலாம் சார்…” என்கிறார்.

போலீஸ்காரர் பேசிக் கொண்டிருந்த சில வினாடிகளில் நிருபர் நேசபிரபு, ”சார் கார் வந்திருக்கு சார்… 5 கார்கள் வந்திருக்கு சார்… ஐயோ சார்… என் வாழ்க்கையே முடிஞ்சுது…” என்று கத்தினார். அவ்வளவுதான்.” இந்த ஆடியோ கேட்பவர்களையும் அதிர்ச்சி அடைய வைக்கும். இதையடுத்து அரசு தரப்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *