பிரஷர் குக்கரில் மட்டன் குழம்பு செய்ய எளிதான ரெசிபி… டேஸ்ட் அப்படி இருக்கும்.!
அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று ‘மட்டன்’. மட்டனை வைத்து பல ரெசிபிகள் உள்ளன. அதில் அனைவராலும் மிகவும் விரும்பப்படுவதில் ஒன்று ‘மட்டன் குழம்பு’.
பொதுவாக மட்டன் குழம்பானது இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் இயல்பாக செய்யக்கூடிய சமையல் ஆகும். இந்த மட்டன் குழம்பை ருசி மிகுந்ததாக பிரஷர் குக்கரில் ஈஸியா எப்படி செய்யலாம் என்று இங்கே காணலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன்
உருளைக்கிழங்கு
வெங்காயம்
தக்காளி
பச்சை மிளகாய்
இஞ்சி பூண்டு விழுது
மிளகாய் தூள்
கொத்தமல்லி தூள்
மட்டன் மசாலா
மஞ்சள் தூள்
பெருஞ்சீரகம்
பிரியாணி இலை
இலவங்கப்பட்டை
ஏலக்காய்
கிராம்பு
எண்ணெய்
உப்பு
செய்முறை :
முதலில் மட்டனை நன்கு அலசி மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மரைனேட் செய்து கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பிரஷர் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
பிறகு அதனுடன் நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 10 நிமிடங்களுக்கு வதக்கவும்.
அனைத்தும் நன்கு வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மட்டன் மசாலா மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு மரைனேட் செய்து வைத்துள்ள மட்டனை சேர்த்து வதக்கி அதனுடன் துண்டாக வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
விசில் அடங்கியவுடன் மூடியை திறந்து பார்த்தால் மட்டன் மென்மையாகவும் சரியாகவும் வெந்திருக்கும்.
அவ்வளவுதான் சுவையான மட்டன் குழம்பு ரெடி. இதை சூடாக அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்…