30,000 இந்திய மாணவர்கள் பிரான்சுக்கு வரவேற்கப்படுவார்கள்: பிரான்ஸ் ஜனாதிபதி அறிவிப்பு
இந்தியாவின் குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், 2030வாக்கில் 30,000 இந்திய மாணவர்கள் பிரான்சுக்கு வரவேற்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
பல்வேறு திட்டங்கள்
பிரெஞ்சு மொழி பேசாத மாணவர்களும் பிரான்ஸ் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து கல்வி கற்பதை சாத்தியமாக்குவதற்காக சர்வதேச வகுப்புகளை உருவாக்கி வருவதாக தெரிவித்த மேக்ரான், பிரான்சில் கல்வி கற்ற மாணவர்கள் பின்னர் பிரான்ஸ் செல்வதற்காக விசா பெறும் நடைமுறையை எளிதாக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
2030ஆம் ஆண்டு வாக்கில், 30,000 இந்திய மாணவர்கள் பிரான்சுக்கு வரவேற்கப்படுவார்கள் என்றும், பிரான்சில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், இரு நாடுகளுக்குமிடையிலான நட்பை வலுப்படுத்துவதுமே தனது குறிக்கோள் என்றும் கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி.