சவுதி அரேபியாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் மதுக்கடைகள்., காரணம்..
உலகில் மதுபானம் தடைசெய்யப்பட்ட நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று.
இஸ்லாமியர்களின் கோட்டையான சவுதி அரேபியாவில் 70 ஆண்டுகளுக்கு முன்பே மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இத்தனை வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் சவூதியில் மதுபானம் கிடைக்கவுள்ளது.
சவுதி அரேபியா ரியாத்தில் மதுபானக்கடைகளை அமைக்க அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஆனால் இதில் சில நிபந்தனைகள் உள்ளன.
நிபந்தனைகள் என்ன? சவுதி அரேபியாவில் மதுவிலக்குக்கு காரணம் என்ன? இப்போது தெரிந்து கொள்வோம்..
சவுதியில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மதுபானக் கடைகள் திறக்கப்படும். ஆனால் இது குறிப்பிட்ட சில முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டுமே.
இந்த மதுபானம் தூதரக அதிகாரிகளுக்கு மட்டுமே என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுவரை சவூதி அரேபியாவிற்கு இராஜதந்திரப் பைகள் எனப்படும் தூதரகப் பணியாளர்களுக்கு சீல் வைக்கப்பட்ட பொதிகளில் மது இறக்குமதி செய்யப்பட்டது.
வெளியான தகவல்களின்படி, புதிய கடை Riyadh Diplomatic Quarterல் சூப்பர்மார்க்கெட்டை அடுத்து அமையும்.
இப்போது சவுதியில் மதுவுக்கு தடை ஏன் என்று பார்ப்போம்..
இஸ்லாத்தில் மது தடை செய்யப்பட்டுள்ளது. வளைகுடா, குவைத், ஷார்ஜா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் மதுவுக்கு தடை விதித்துள்ளன.
1852-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் மது தடை செய்யப்பட்டது. இதற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது..
குடிபோதையில் நடந்த சண்டையில், அப்போதைய சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல் அஜீஸின் மகன் இளவரசர் மிஷாரி, பிரிட்டிஷ் தூதர் சிரில் ஒஸ்மானை ஜெட்டாவில் சுட்டுக் கொன்றார்.