அணை உடைந்து ஒரு கிராமமே மொத்தமாக புதைந்த துயரம்… ரூ 74,000 கோடி அபராதம் விதிப்பு

பிரேசில் நாட்டில் மூன்று சுரங்க நிறுவனங்கள் காரணமாக அணை உடைந்து ஒரு கிராமமே பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ 74,000 கோடி அபராதம் விதித்து பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஒரு கிராமமே சகதிக்குள்

பிரேசில் நாட்டில் கடந்த 2015ல் பேரழிவை ஏற்படுத்திய இந்த சம்பவம் நடந்துள்ளது. நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Fundão என்ற அணை உடைந்து, ஒரு கிராமமே சகதிக்குள் மூழ்கியது.

இச்சம்பவத்தில் 19 கிராம மக்கள் மரணமடைந்தனர். அத்துடன் Rio Doce என்ற நதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மூன்று சுரங்க நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. தற்போது விசாரணை முடிந்துள்ள நிலையில், மொத்தமாக ரூ 74,000 கோடியை இழப்பீடாக அளிக்க பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் எந்த நிறுவனம் எவ்வளவு செலுத்த வேண்டும் என குறிப்பிடவில்லை என்றே கூறப்படுகிறது. மூன்று நிறுவனங்களில் இருந்து வசூலிக்கப்படும் அந்த தொகையானது அரசாங்க நிதியில் சேர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்க பயன்படுத்தப்படும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய Vale என்ற சுரங்க நிறுவனம் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட பகுதியில் இழப்பீடு தொகையை அளித்து வருவதாகவும், இதுவரை உள்ளூர் பண மதிப்பில் சுமார் 34.7 பில்லியன் அளவுக்கு செலவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

700 பேர்கள் மீட்கப்பட்டனர்

 

ஆனால் எஞ்சிய இரு நிறுவனங்களும் இதுவரை இந்த விவகாரம் தொடர்பில் பதிலளிக்கவில்லை. அவுஸ்திரேலியாவின் BHP என்ற சுரங்க நிறுவன குழுமம் மற்றும் பிரேசில் நாட்டின் Vale என்ற சுரங்க நிறுவனம் ஆகிய இருவருடன் Samarco என்ற நிறுவனம் கூட்டு முயற்சியில் இரும்பு தாது உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *