கிராமப்புற மேம்பாட்டிற்கு நிதியுதவி செய்தால் வரி விலக்கு கிடைக்குமா? புது தகவலா இருக்கே.
நாடு அறிவியல் ரீதியாக முன்னேற வேண்டும், அதே வேளையில் நமது கிராமங்களும் மேம்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் கொண்டவர்கள் அதற்காக நிதியுதவி செய்தால் வருமான வரிச் சலுகை வழங்கி ஊக்குவிக்கிறது மத்திய அரசு.இதற்காக உருவாக்கப்பட்டது தான் வருமான வரி சட்டத்தின் பிரிவு 80GGA.பிரிவு 80GGA:
வருமான வரி சேமிப்புக்கு திட்டமிடும் போது, வரியை சேமிப்பதற்காக ஏதேனும் ஒரு நிதியுதவியை செய்யாமல், நமது கிராமங்களின் வளர்ச்சி மற்றும் அறிவியல் ஆய்வுகளுக்கு உதவி செய்து கூட வரிச்சலுகை பெறலாம். நிபந்தனைகள் என்னென்ன?அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள்/ கூட்டமைப்புகள் / பல்கலைகழகங்கள் அளிக்கும் நன்கொடைகள்.
அந்த நிறுவனம் பிரிவு 35(1)(ii)இன் கீழ் இணங்க வேண்டும்சமூக அறிவியல் அல்லது புள்ளியியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள்/கல்லூரிகள்ஊரக வளர்ச்சி திட்டங்களில் ஈடுபட்டுள்ள பிரிவு 35CCAஇன் கீழ் உள்ள நிபந்தனைகளுக்கு இணங்கும் நிறுவனங்கள்தனிநபர்.
அல்லது குழுக்களுக்கு கிராமப்புற மேம்பாட்டு பயிற்சி அளிப்பதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு அளிக்கும் நன்கொடைகள்100% வரி விலக்கு கிடைக்குமா?ஊரக வளர்ச்சி நிதி, காடு வளர்ப்பு நிதி, தேசிய வறுமை ஒழிப்பு நிதியம் போன்றவற்றுக்கு நிதியுதவி அளித்தால் 100% வரி விலக்கு உண்டு. குறிப்பாக ஒரு நிதியாண்டில் ரொக்கமாக நன்கொடை வழங்கி இருந்தால் ரூ.10,000 வரை மட்டுமே வரி விலக்கு கிடைக்கும்.
ஆனால் டிஜிட்டல் முறையிலோ அல்லது, காசோலை, வரைவோலை முறையிலோ வழங்கினால் 100% விலக்கு கிடைக்கும்.உதாரணம்:பூர்ணிமாவின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் என வைத்து கொள்வோம்.
அவர் ரூ.50,000ஐ கிராமப்புற மேம்பாட்டு நிதியத்திற்கு நன்கொடையாக அளிக்கிறார். இதை அவர் ரொக்கமாக வழங்கினால் ரூ.10,000 வரை மட்டுமே வரி விலக்கு கிடைக்கும், இதுவே காசோலை , வரைவோலை அல்லது ஆன்லைன் பரிமாற்றம் எனில் ரூ. 50,000ஐ முழுமையாக விலக்கு கோரலாம்.படிவம் 58A ஏன் முக்கியம்?
இந்த பிரிவில் வருமான வரிச் சலுகை கோருவதற்கு முன், படிவம் 58A குறித்து அறிந்து கொள்வது முக்கியம். நீங்கள் நன்கொடை அளிக்கும் நிறுவனத்தின் அடிப்படை விவரங்கள் இடம் பெற்றுள்ள இந்த படிவத்தை சமர்ப்பித்தால் மட்டுமே வரிச்சலுகைக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஓராண்டில் ஒரு முறை மட்டுமே இந்த பிரிவை பயன்படுத்த முடியும்.நன்கொடை அளிப்பதற்கு முன்பு அது அரசு அங்கீகரித்த நிறுவனமா என்பதை கவனியுங்கள். ஏனெனில் அரசு அவ்வப்போது இந்த பட்டியலில் திருத்தம் மேற்கொள்கிறது.