ஐ.சி.ஐ.சி.ஐ vs ஹெச்.டி.எஃப்.சி: மூத்தக் குடிமக்கள் எஃப்.டி.க்கு எந்த வங்கி பெஸ்ட்?
மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகையின் (எஃப்டி) வட்டி விகிதங்கள் பொது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் நிலையான விகிதத்தை விட 2% அதிகமாக இருக்க வேண்டும் என்று நாட்டில் ஓய்வூதியதாரர்களின் கூட்டமைப்பான பாரத் பென்ஷனர்ஸ் சமாஜ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘மூத்த குடிமக்களின் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை 0.25% முதல் 0.50% வரை உயர்த்தி திருத்தம் செய்வது அவசியம் ஆகும்’ எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஃபெடரல் வங்கி உட்பட பல்வேறு முன்னணி வங்கிகள் ஜனவரியில் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.
இந்த நிலையில், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியில் 5 ஆண்டு கால மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் குறித்து பார்ப்போம்.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி வங்கி வட்டி விகிதங்கள் கடைசியாக 1 அக்டோபர் 2023 அன்று திருத்தப்பட்டன. தற்போது, ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி 5 வருட டெபாசிட் திட்டங்களுக்கு மூத்த குடிமக்களுக்கு 4% முதல் 7.75% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி 3.50% முதல் 7.65% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. வங்கி 5 வருட காலப்பகுதியில் 7.50% வழங்குகிறது.