அப்படிபோடு வெடிய.. ஹெலிகாப்டர் தயாரிக்கிறதாம் டாடா குழுமம்.. அதுவும் யாருக்காக தெரியுமா..?
டாடா குழுமம் குஜராத் மாநிலத்தின் வதோதராவில் ஐரோப்பிய விமானத் தயாரிப்பாளரான ஏர்பஸ்-ன் வணிகப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தும் H125 ரக ஒற்றை எஞ்சின் கொண்ட ஹெலிகாப்டர்களைக் கூட்டாக இணைந்து தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் விமானங்களைத் தயாரிக்கும் திட்டத்தை அமைக்க நீண்ட காலமாக முயற்சி செய்து வரும் வேளையில் இந்தத் தகவல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் தெரிகிறது.
டாடா குழுமம் மற்றும் ஏர்பஸ் இணைந்து வதோதரா தொழிற்சாலையில் குறைந்தது நாற்பது C-295 போக்குவரத்து விமானங்களை உருவாக்குவார்கள். இந்தத் தயாரிப்பு பணிகளை Tata Advanced Systems Ltd (TASL) ஆல் மேற்பார்வை செய்யப்படுகிறது. குடியரசு தின அணிவகுப்பில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரான்ஸ் அதிபர்.
இம்மானுவேல் மேக்ரான் கலந்து கொண்ட பிறகு, ஜனவரி 26-ம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியாகும் என ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் மற்றும் இந்தியாவிற்கு இடையே வளர்ந்து வரும் நட்புறவு, இந்தியாவின் பாதுகாப்பு, அணுசக்தி மற்றும் விண்வெளி.
ஆகிய துறையில் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப பகிர்வு மூலம் இத்துறையில் இருநாடுகள் மத்தியிலான உறவுகளை வலுப்படுத்துவதற்குப் பங்களித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில், பிரான்சில் பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்,
அப்போது கூடுதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான திட்டங்கள் வெளியிடப்பட்டன. இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் மத்தியில் அதிகப்படியான ஹெலிகாப்டர்களுக்கு அதிகப்படியான டிமாண்ட்.
இருக்கும் பட்சத்தில் டாடா குழுமம் மற்றும் ஏர்பஸ் கூட்டணியில் உருவாக்கப்படும் H125 ரக ஒற்றை எஞ்சின் கொண்ட ஹெலிகாப்டர்கள் முக்கிய விற்பனை தளமாக இந்தியா மாறும். உள்நாட்டில் தயாரிக்கப்படுவதால் இதன் விலை குறைவது மட்டும் அல்லாமல் சர்வீஸ், உதிரிப்பாகங்களுக்குமான