பட்ஜெட்: பிப்ரவரி 28ல் இருந்து பிப்.1 ஆம் தேதிக்கு மாற்ற என்ன காரணம் தெரியுமா..?

இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2024 இல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால், இது முழு பட்ஜெட்டுக்கு பதிலாக இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். தேர்தலுக்குப் பின் யார் அரசு அமைத்தாலும் முழு பட்ஜெட் தாக்கல் ஜூலை 2024 இல் நடைபெற உள்ளது.

பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது அனைவரும் அறிந்ததே என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் இந்த நிலை இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பட்ஜெட் பிப்ரவரி 28 அல்லது 29 ஆம் தேதியில் தாக்கல் செய்யப்பட்டது.

2017ல், முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பிப்ரவரி மாதத்தின் இறுதி வேலை நாளான பிப்ரவரி 28 அல்லது 29 அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என்று அறிவித்தார். மாறாக, ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தேதியாக பிப்ரவரி 1ம் தேதி தேர்வு செய்யப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்பட்டு வருகிறது.

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தொண்ணூறு வருடங்களுக்கு மேலான பாரம்பரியத்தை நிறுத்தும் முயற்சியில், 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி கடைசி நாளான பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்தார்.இது பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் செய்யப்பட்டது.

பிப்ரவரி மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால், புதிய நிதியாண்டு (ஏப்ரல் 1) முதல் நடைமுறைக்கு வரும் புதிய கொள்கைகள் மற்றும் மாற்றங்களுக்குத் தயாராகுவதற்கு அரசுக்கு மிகக் குறைந்த காலமே இருக்கும் என்று ஜேட்லி குறிப்பிட்டார்.இதன் விளைவாக, பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

அதுவரை ரயில்வேக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் வழக்கத்தை ஜெட்லி நீக்கினார். இதுவும் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் இருந்து வந்தது. யூனியன் பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் ஆகியவை பின்னர் இணைக்கப்பட்டன.2017 இல் நடந்த தேதி மாற்றம் தவிர, யூனியன் பட்ஜெட்டின் நேரமும் மாற்றப்பட்டது.

1999ஆம் ஆண்டு, அப்போதைய இந்திய நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, மாலை 5 மணியிலிருந்து காலை 11 மணியாக நேரத்தை மாற்றினார். அப்போதிருந்து, பிப்ரவரி கடைசி வேலை நாளில் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் ஜெட்லியின் 2017 அறிவிப்புக்குப் பிறகு, தேதியும் பிப்ரவரி 1 ஆக மாற்றப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதியன்று தான் மத்திய நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு தனது ஐந்தாவது பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *