சைக்கிளிங் – கேலோ விளையாட்டு போட்டிக்காக சென்னையில் போக்குவரத்து மாற்றம்: எங்க தெரியுமா?
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 5,500க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர். கபடி, தடகளம், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, ஜூடோ, ஸ்குவாஷ் உள்பட 26 விதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. கடந்த 19 ஆம் தேதி 31 ஆம் தேதி வரையில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதில், 6 நாட்கள் முடிவில் தமிழ்நாடு 25 தங்கம், 12 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என்று மொத்தமாக 60 பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் தான் நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையில் ஈசிஆர் (மகாபலிபுரம் – கோவளம்) பகுதியில் சைக்கிளிங் போட்டி நடக்க இருக்கிறது.
இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் ஈசிஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மகாபலிபுரம் மற்றும் கோவளம் பகுதியில் சைக்கிளிங் போட்டிகள் நடைபெறும் நிலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆதலால் இந்த 2 நாட்களும் பூஞ்சேர், கேளம்பாக்கம் மற்றும் திருப்போரூர் வழியை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.