Anushka Net Worth: கோடிகளில் சம்பளம், ஆடம்பர பங்களா, பல கார்கள்.! கிறுகிறுக்க வைக்கும் அனுஷ்கா சொத்து மதிப்பு!
பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’ படத்தில் தேவசேனாவாக நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தவர் அனுஷ்கா ஷெட்டி. 1981 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி புத்தூரில் பிறந்த அனுஷ்கா, சூப்பர் என்கிற தெலுங்கு படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக அறிமுகமானார்.
இவர் நடித்த முதல் படமே… சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில், அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழில் 2006 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், மாதவனுக்கு ஜோடியாக நடித்த அனுஷ்கா இப்படத்தில், அளவுக்கு அதிகமான கவர்ச்சி காட்டி ரசிகர்களை திணறடித்தார்.
இதை தொடர்ந்து வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இவர், சிங்கம் சீரிஸ், வானம், தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், லிங்கா, சைஸ் ஸிரோ போன்ற படங்களில் நடித்தார்.
இவர் நடிப்பில் கடைசியாக, மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலி ஷெட்டி திரைப்படம் வெளியான நிலையில்… தற்போது மலையாளத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அனுஷ்கா எத்தனையோ ஹிட் படங்களில் நடித்திருந்தாலும், இவர் நடிப்பில் வெளியான அருந்ததி மற்றும் பாகுபலி ஆகிய படங்கள் மாஸ்டர் பீஸ் எனலாம்.
43 வயது வரை இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா ஷெட்டி இந்த ஆண்டு ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸை திருமணம் செய்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க இவருடைய சொத்து மதிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அனுஷ்கா தற்போது வாழ்ந்து வரும் பங்களா வீடு 40 முதல் 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இது தவிர, ஆந்திரா, ஹைதராபாத் போன்ற இடங்களிலும் இவருக்கு சில வீடுகள் மற்றும் இடங்கள் உள்ளது.
தங்க நகை மீது அனுஷ்காவுக்கு பெரிதாக ஈர்ப்பு இல்லை என்றாலும் வைரம் மற்றும் பிளாட்டினம் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே இவரின் கலெக்ஷனில் தங்கத்தை விட வைரம் அதிகம் என கூறப்படுகிறது. அதே போல் விதவிதமான, கார்கள் வாங்குவது அனுஷ்காவுக்கு மிகவும் இஷ்டம். அந்த வகையில், இவரிடம் சுமார் 7 முதல் 10 வகையான காஸ்டலி கார் இருப்பதாக கூறப்படுகிறது.
இதை தவிர அனுஷ்கா தான் நடிக்கும் படங்களுக்கு 5 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். விளம்பரங்களில் தோன்ற 3 கோடி முதல் வாங்குகிறார். சில தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் இவருக்கு ஆண்டு தோறும், 12 முதல் 15 கோடி வரை கிடைக்கிறது. எனவே அனுஷ்காவை சொத்து மதிப்பு… 130 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.