Flash Back 2023: பிரதமர் மோடியின் 11 வெளிநாட்டு பயணங்கள், உயரிய விருதுகள், சர்வதேச மாநாடுகள்!

2023-ம் ஆண்டு பிரதமர் மோடி 11 முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார். பல்வேறு சர்வதேச மாநாடுகளில் பங்கேற்றார்.

பிரதமர் மோடியின் 2023-ம் ஆண்டு வெளிநாட்டு பயணங்கள் குறித்த பார்வை.

மே 19- 21: ஜப்பான் பிரதமர் ஃபியூமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் அந்நாட்டின் தலைமையில் நடைபெற உள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பு.

மே 21-22 : பப்புவா நியூ கினியாவிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் சென்றது முதல் முறை. பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மாராபேவுடன் இணைந்து இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் மூன்றாவது உச்சிமாநாட்டிற்கு தலைமை வகித்தார்.

மே 22-24 : ஆஸ்திரேலியா பிரதமர் அல்பனீசின் அழைப்பை ஏற்று அந்நாட்டின் சிட்னி நகருக்கு பயணம்.

ஜூன் 20-23: அமெரிக்க அதிபர் ஜோசப் பைடன், முதல் பெண்மணி டாக்டர். ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் அரசு முறை பயணமாக அமெரிக்கா பயணம். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில், ஐ.நா தலைவர்கள் மற்றும் சர்வதேச சமுதாயத்தினருடன் சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்பு.

ஜூன் 24-25: எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியின் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு அரசு முறை பயணம்.

ஜூலை 15-13: பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் பாஸ்டல் தின ராணுவ அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்பு. பிரான்சின் உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டது. எகிப்தின் உயரிய சிவிலியன் விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல் விருது வழங்கப்பட்டது.

ஜூலை 15: ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அரசு முறை பயணம். அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு நிகழ்வாக வரவேற்றார்.

ஆகஸ்ட் 22-24: தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்கில் உள்ள சம்மர் பிளேஸில் நடைபெற்ற பிரிக்ஸ் தலைவர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்பு.

ஆகஸ்ட் 25: கிரீஸ் நாட்டுக்கு அரசு முறை பயணம். அந்நாட்டின் 2-வது உயரிய சிவிலியன் விருது, ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்’ விருதை அந்நாட்டு அதிபர் கத்தரீனா சாகெல்லரோபௌலோ வழங்கினார்.

செப். 5 முதல் 7: ஆசியான் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஜோகோ விடோடோ அழைப்பின் பேரில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்கு பயணம்.

நவம்பர் 30 முதல் டிசம்பர் 2: ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவரும் அபுதாபி ஆட்சியாளருமான எச்.எச்.ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் உலக பருவநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக துபாய் பயணம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *