ருசி மிகுந்த கடலை பருப்பு பாயாசம் இப்படி செய்து பாருங்கள்.!
பாயாசம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும் கடலை பருப்பில் செய்யப்படும் பாயசம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பாயசம் வகைகளில் ஒன்று.
ஒரு முறை கடலை பருப்பு பாயாசத்தை இங்கே குறிப்பிட்டுள்ள ரெசிபி படி வீட்டில் செய்து பாருங்கள் ருசி அவ்வளவு அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
கடலை பருப்பு – 1 கப்
வெல்லம் – 1 கப்
தேங்காய் பால் – 1/2 கப்
துருவிய தேங்காய் – 4 ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
முந்திரி – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் தேவையான அளவு கடலை பருப்பை நன்றாக அலசி எடுத்து கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து சூடானதும் மிதமான தீயில் கடலை பருப்பை சேர்த்து கருகாமல் வறுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் குக்கர் வைத்து தண்ணீர் ஊற்றி அதனுடன் வறுத்து வைத்துள்ள கடலை பருப்பை சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
விசில் வெந்தவுடன் 3 ஸ்பூன் பருப்பை மட்டும் எடுத்து தனியே வைத்துகொள்ளுங்கள். பிறகு மீதமுள்ள கடலை பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துகொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வெல்லத்தை சேர்த்து அது கரைவதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
வெல்லம் முழுவதும் கரைந்ததும் அரைத்த பருப்பை சேர்த்து கலந்துவிட்டு அதனுடன் எடுத்து வைத்துள்ள அரைக்காத பருப்பையும் சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாய் ஒன்றை வைத்து சூடானதும் நெய் சேர்த்து அதில் முந்திரி மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும்.
இரண்டும் வதங்கியவுடன் இதை பாயசத்தில் போட்டு கலந்துவிடவும்.
10 நிமிடங்கள் பாயசம் வெந்தவுடன் தேங்காய் பால் சேர்த்து 2 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைக்கவும்.
அவ்வளவு தான் ருசி மிகுந்த கடலை பருப்பு பாயசம் தயார்.