இது தெரியுமா ? அகத்திக் கீரை மணத்தக்காளிக் கீரை மாற்றி மாற்றி வெங்காயம் சேர்த்து சாப்பிட்டு வந்தால்…
அருகம் புல் சாறின் அருமை:
ஆபத்துக்கு உதவுவது அருகம்புல். திடீர் வண்டுக்கடி, அலர்ஜி(Allergy) என்ற ஒவ்வாமை(), கடித்தது என்னவென்று தெரியாத விஷக்கடி(Poisonous bite) போன்றவற்றிற்கு, நச்சு நீக்கியாக அருகம்புல் சாறு உதவும்.
இடுப்பு வலியா?
வருத்த உளுந்து மாவு நூறு கிராம், நல்லெண்ணெய் 200 கிராம். கருப்பட்டி அல்லது பனை வெல்லம் 200 கிராம். அமுக்கிரா கிழங்கு மாவு 100 கிராம். நல்லெண்ணெயை வாணலியில் இட்டு அடுப்பில் வைத்து எரித்து அதில் மற்ற மேலே கூறிய பொருட்களை இட்டு இளகம் போல் செய்து காலை- மாலை ஒரு கோலி அல்லது ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் குனிய நிமிர முடியாத இடுப்பு வலிகள் குணமாகும்.
உடம்பு எரிச்சல் குணமாக ;
உடம்பு எரிச்சல் குணமாக தினமும் காலையில் கரும்புச்சாறு 100 மில்லி தயிர் 100 மில்லிகலந்து சாப்பிட உடம்பு எரிச்சல் சரியாகும்.
கண் பார்வை குறைவா?
கொத்து மல்லிக்கீரையில் பல அரிய சத்துக்கள நிரம்பியுள்ளன. வாசனை மிகுதி. தினமும் கொத்து மல்லியை வாயிலிட்டு மென்று தின்றால் கண்பார்வை தெளிவு பெறும்.
கால்வெடிப்பு குணமாக ;
கால்வெடிப்பு வராமல் தடுக்க, இரவில் படுக்கச் செல்லும்போது பாதங்களில் இலுப்பை எண்ணெய் அல்லது வேப்பை எண்ணெய் தடவுங்கள். காலையில் பல் துலக்கி நீராகாரம் அல்லது மோர் எலுமிச்சை ஊறுகாயுடன் அருந்துங்கள்.
குடல்புண் குணமாக ;
முட்டைகோஸ் ஐம்பது கிராம் எடுத்து இருநூறு மில்லி தண்ணீரில் வேகவைத்து அந்த நீரை பருகுங்கள். வேறு மருந்து தேவையில்லாமல் குடற்புண் குணமாகும்.
சளியைத் துரத்தும் தூதுவளை :
தூதுவளை, பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதன் இலைகள் சளியால் ஏற்படும் தொண்டை வலிக்கு மிகச் சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. அதிக உஷ்ணத் தன்மை கொண்டது. எனவே, கபத்தை உடைக்கும் தன்மை கொண்டது. இதைத் தொடர்ந்து உட்கொண்டால், நல்ல உடல் வனப்பும், கட்டான உடலமைப்பும் பெறுவர். இக்கீரை, மூலநோய்க்கு(Hemorrhoids) நல்ல மருந்தாகும். அதிக உஷ்ணம் கொண்டதால் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடலாம். இதை தண்ணீரில் போட்டு காய்ச்சி, வடிகட்டி, அந்த தண்ணீரை பருகி வந்தால், இருமல் குணமாகும்.
சொரி சிறங்கு குணமாக ;
கற்பூரம், சந்தனம், மிளகு சமஅளவு எடுத்து அரைத்து உடம்புக்கு தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளித்தால் சொரி சிரங்கு குணமாகும்.
வசம்பு 50 கிராம் எடத்து 200 மில்லி தேங்காய் எண்ணெயுடன் கலந்து உடம் பில் பூசி வர சொரி சிறங்குகள் அகலும்.
சோற்று கற்றாழையின் மருத்துவ குணங்கள் ;
இதன் ஜெல் சருமத்தை பளபளப்பாக்க உதவுகிறது. முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி, முகப்பருக்களை போக்க உதவுகிறது. சிறிதளவு கற்றாழை ஜெல்லுடன் 10 சொட்டு பாதாம் எண்ணெய் விட்டு முகத்தில் தடவி வர, வறண்ட சருமம் சரியாகும். கிளிசரின் ஒரு டீஸ்பூன், எலுமிச்சை பழ எண்ணெய் இரண்டு சொட்டு ஆகியவற்றுடன், கற்றாழை ஜெல்லை (Aloe vera gel)கலந்து முகத்தில் போட்டால், சருமம் மிருதுவாகும்.
குறிப்பு: கடையில் ரெடிமேடாக கிடைக்கும் கற்றாழை ஜெல்களை வாங்கி பயன்படுத்துவதை விட, வீட்டில் செடி வளர்த்து, அந்த இலைகளிலிருந்து நாமே பிரஷ்ஷாக ஜெல் எடுத்து பயன்படுத்தினால், கூடுதல் பலன் பெறலாம்.
பல் சொத்தை ஆவதை தவிர்க்க ;
சிறுவர்கள் சர்க்கரைப் பொருட்கள், இனிப்புப் பொருட்கள், சாக்லெட், மிட்டாய், ஐஸ் கிரிம், கிரஷ, குளிர்ந்த பானங்கள் சாப்பிடும்போது சர்க்கரை பல்லில் ஒட்டி எனாமல்போய் கிருமிகள் உண்டாகி சொத்தை ஆகின்றன. இவற்றை தவிர்ப் பது நல்லது.
புண்கள் ஆற வேண்டுமா?
வெள்ளை வெங்காயத்தை அடிக்கடி உணவில் பயன்படுத்துங்கள். வயிற்றிலும் குடலிலும் உண்டாகும் புண்களை ஆற்றிவிடும்.
இளம் ஆண்- பெண்களுக்கு ஏற்படும் முகப்பருக்கள் போக, காய்ச்சி ஆறிய ஒரு கோப்பை நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து சீனிச்சர்க்கரை கலந்து சாப்பிட குணம் கிடைக்கும்.
மசக்கை வாந்தியா?
பெண்கள் மசக்கை வாந்திக்கு காய்ச்சிய பசும்பாலில் ஆறிய பிறகு நாட்டுக் கோழி முட்டையின் வெண்கரு(Nucleus of the egg white), கால் பாட்டில் சோடா நீர்(Soda Water) கலந்து சாப்பிட கர்ப்பணிக்கு ஏற்பட்ட மசக்கை வாந்தி உடனே நிற்கும்.
நீர் கடுப்பு உடல் எரிச்சல் தீர ;
வெள்ளரிக்காய், தக்காளிப்பழம், வெங்காயம், பச்சைப் பருப்பு சேர்த்து கூட்டு சாப்பிடுங்கள். குணமாகும்.
தேள் கடித்து விட்டதா?
தேங்காய் அரை மூடியை திருகி பால் எடுத்து கொஞ்சம்கொஞ்சமாக குடியுங்கள். கடுப்பு குணமாகும். வெங்காயத்தை கொட்டிய பாகத்தின் மேல் தேய்த்துக் கொண்டிருக்க வலி கொட்டிய இடத்துக்கு வந்துவிடும்.
தோல் வியாதி குணமாக்கும் திருநீற்றுபச்சை:
படை மற்றும் தோல் வியாதிகளுக்கு பயன்படுகிறது. முகப்பரு, வேனல் கட்டி போன்றவற்றிற்கு இந்த இலையின் சாற்றை போட்டால் குணமாகும். இதன் சாறை தேள் கடித்த இடத்தில் தடவ, கடுப்பு நீங்கும்.
பருத்த உடலை இளைக்கச் செய்ய – (நீங்கள் ஒல்லியாக வேண்டுமா?)
ஐம்பது கிராம் கொள்ளு எடுத்து அரைலிட்டர் தண்ணீரில் இரவில் ஊறவைத்து காலையில் கொதிக்க வைத்து, சிறிது இந்துப்பு சேர்த்து சாப்பிடவும். அதேபோல் காலையில் ஊறவைத்து இரவில் சாப்பிட வேண்டும். இப்படியாக 48 நாட்கள் சாப்பிட்டால் சரிரம் இளைத்து விடும்.
ஜீரண சக்தி கோளாறா?
நன்றாக ஜீரணமாகவேண்டுமா? சுவையான காய்கறி பண்டங்களில் கரு வேப்பிலைசேர்த்துக் கொள்ளுங்கள். வாசனையோடு பண்டங்களுக்கு சுவையூட்டி நல்ல ஜீரணமும் கொடுக்கும் இந்த கருவேப்பிலை(Curry leaves). பருப்பு அல்லது தேங்காய் புளி மிளகாய் சேர்த்து துவையல் செய்து சாப்பிடுங்கள்.
வாய்ப்புண் குணமாக ;
வாயில் புண் அடிக்கடி வருகிறதா? அகத்திக் கீரை, மணத்தக்காளிக் கீரை மாற்றி மாற்றி வெங்காயம் சேர்த்து சாப்பிடுங்கள். தேங்காய் துருவி பால் சாப்பிடுங்கள். மரு தோன்றி இலையை நீரில் இரவில் ஊறவைத்து காலையில் வாய் கொப்பளிக்க புண்கள் ஆறிவிடும்.
வேம்புவின் மருத்துவ குணங்கள்:
மருத்துவ குணம் கொண் டது. சின்னம்மை தாக்கிய பின், முதலில் குளிக்கும் போது இதன் இலையை போட்டு குளிப்பது வழக்கம். வேப்பிலைகளை பெட்டிகள் மற்றும் பீரோவில் போட்டு வைப்பதால், கரப்பான் பூச்சிகள் அண்டாது.
வேதனைகளைப் போக்கும் வில்வம்:
வில்வ மரத்தின் இலை, பூ, காய், வேர் ஆகிய எல்லாமே மருந்தாக பயன்படும். வில்வ இலை மூன்று இலை சேர்ந்த மாதிரி அமைந்திருப்பது அதன் தனிச் சிறப்பு. வில்வ இலை மாலை கண் நோய்(Eye disease in the evening) மற்றும் தோல் வியாதிகளுக்கு(Skin Diseases) சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
வில்வ பழம் (Bow saw fruit)பித்தத்தை போக்கும். இப்பழத்துடன் சர்க்கரை சேர்த்து, காலையில், 21 நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் அடியோடு ஒழியும். வயிற்றுப் புண்ணால் ஏற்படும் வாய்ப்புண், வாய் வெந்திருத்தல் போன்றவற்றிற்கு வில்வப் பழத்துடன்(Arcuate fruit) சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மூன்றே நாளில் நலமாகும்.