இது தெரியுமா ? தினமும் காலையில் பழைய சோறு சாப்பிட்டு வந்தால்…
தினமும் காலையில் பழைய சோறு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு மிக மிக சிறந்த உணவாக அமையும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பழைய சோற்றில் உடலுக்கு நன்மை பயக்கும் லாக்டோ பேசிலெஸ் ,ஈஸ்ட் பைடோ பாக்டீரியல் ,ஸ்டெப்சோ கண்டறிந்துள்ளனர்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் இந்த வகையான பாக்டீரியாக்கள் இல்லாததினால் தான் பலவித குடல் சார்ந்த வயிற்று பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
பழைய சோறு மூலம் கிடைக்க பெறும் பாக்டீரியாக்கள் மூலம் பலரது குடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இத்துடன் நீரழிவு நோய்க்கும் பழைய சோறு அருமருந்தாக செயல்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பொட்டாசியம், சோடியம், மெக்னீசியன், கால்சியம், செலினியம் போன்ற தாதுக்கள் போதுமான அளவுக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கிய சத்துக்களாக காணப்படும் விட்டமின் பி6 மற்றும் விட்டமின் பி12 அசைவ உணவுகளில் மட்டுமே பெரும்பாலும் உள்ளது.
இந்த விட்டமின் பி6, பி12 பழைய சோற்றில் அதிகமாக இருப்பதால் கண்டிப்பாக தினமும் காலையில் சாப்பிடுவது நல்லது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காலையில் பழைய சோறு சாப்பிடுவதனால் வயிறு சம்பந்தமான அனைத்து அஜீரண பிரச்சனைகளும் குணமாகும் .
பழைய சோற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவுகின்றது .மேலும், உடல் சோர்வை நீக்க உதவுகிறது.
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பழையசோறு உண்பதினால் அதன் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது. மேலும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க உதவுகின்றது.
உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகமாக பழைய சோற்றில் தான் உள்ளது. உடலில் ஏற்படும் உஷ்ணத்தையும் நீக்குகின்றது.
உடலில் ரத்தம் அளவு என கூறப்படும் ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் கூட தினமும் காலையில் பழைய சொத்துடன் தயிர் அல்லது வெங்காயம் ஏதேனும் துவையல் போன்றவற்றை உடன் கலந்து சாப்பிடுவதனால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கின்றன.