அன்னாசி பழம் பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான விஷயங்கள்!
Pineapple Benefits In Tamil: அன்னாசி பழத்தில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகிறது. அன்னாசி பழத்தில் மாங்கனீசு, ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் தாமிரம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
அன்னாசி பழம் வெப்பமான பகுதிகளில் காணப்படும் பழமாகும்.
அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்ற சத்து காணப்படுகிறது. இது புற்றுநோய் தடுப்பு, நோயெதிர்ப்பு சக்தி செயல்பாடு, குடல் ஆரோக்கியம் போன்ற பல்வேறு நோய்களுக்கு பயன்படுகிறது. அன்னாசி பழம் நம்முடைய செரிமான பிரச்சினைகளுக்கும் சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. சரி வாங்க அன்னாசி பழத்தின் கூடுதல் நன்மைகள் பற்றி இங்கே அறிந்து கொள்வோம்.
அன்னாசி பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்
அன்னாசி பழம் நீண்ட கால ஆரோக்கிய நன்மைகளை வழங்க கூடியது. அன்னாசி பழத்தை நீங்கள் உட்கொண்டு வந்தால் இதய நோய், நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் ஒட்டுமொத்த இறப்பு அபாயத்தையும் குறைக்க முடியும். ஆரோக்கியமான சரும பாதுகாப்பு, குறைந்த எடை போன்றவற்றிற்கு அன்னாசி பழம் உதவுகிறது. அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்ற சத்து காணப்படுகிறது. இது உங்களுக்கு எப்பொழுதும் சிறந்த ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.
நீரிழிவு நோய்
அன்னாசி பழத்தில் நிறைய நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இது டைப் 1 நீரிழிவு நோயை குறைக்க உதவி செய்யும். இது இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த உதவுகிறது. ஒரு நடுத்தர அன்னாசி பழத்தில் சுமார் 13 கிராம் அளவிற்கு நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. ஆண்களுக்கு ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்து அளவு 30-38 கிராம் நார்ச்சத்துக்கள் ஆகும். பெண்களுக்கு ஒரு நாளைக்கு 21-25 கிராம் அளவிற்கு நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது.
இரத்த அழுத்தம்
அன்னாசி பழத்தில் பொட்டாசியம் நிறைய அளவு காணப்படுகிறது. இதில் உள்ள அதிகளவு பொட்டாசியம் சத்து உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். தேசிய உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனைக் கணக்கெடுப்பின்படி, தினசரி பொட்டாசியம் தேவையாக 4700 மி. கி யை பரிந்துரைக்கின்றனர். அதிக அளவு பொட்டாசியம் உட்கொள்வது இறக்கும் அபாயத்தை 20% குறைக்கிறது.
வயது தொடர்பான மாகுலர் சிதைவு
ஒரு நாளைக்கு 3 அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளில் நீங்கள் அன்னாசி பழத்தை எடுத்துக் கொள்ளும் போது கண்களில் ஏற்படும் மாகுலர் சிதைவு தடுக்கப்படுகிறது. அன்னாசி பழத்தில் நிறைய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை காணப்படுகிறது.
ஆஸ்துமா ஆபத்தை குறைக்கிறது
அன்னாசி பழம், பாதாமி, மாம்பழம் போன்ற பழங்கள் ஆஸ்துமா ஆபத்தை குறைக்க உதவுகிறது. எனவே ஆஸ்துமா அறிகுறிகளை குறைக்க இந்த பழங்களை எடுத்துக் கொண்டு வரலாம்.
செரிமான சக்தியை மேம்படுத்துகிறது
அன்னாசி பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.
வீக்கத்தை குணப்படுத்த உதவுகிறது
அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்ற சத்து காணப்படுகிறது. இது சருமத்தில் ஏற்படும் வீக்கம், சிராய்ப்பு போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது. தொண்டை, மூக்கு மற்றும் காது அறுவை சிகிச்சை காயங்களை குணப்படுத்தவும், சுளுக்கு, தசைநாண் அழற்சி போன்ற தசை காயங்களை குணப்படுத்தவும் ப்ரோமெலைன் உதவுகிறது.