புற்றுநோய் குறித்த இந்த விஷயங்கள் தெரியுமா? எச்சரிக்கை விடுக்கும் அறிகுறிகள்!!!
நமது உடல் பலவகையான உயிரணுக்களால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க, இவை வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன. ஆனால், ஏதாவது காரணத்தால் இந்த செயல்பாடுகள் மாறும்போது, புதிய உயிரணுக்கள் அதிகமாக உருவாகிவிடுகின்றன. பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழும் நிலையில், உயிரணுக்கள் உடலில் கட்டியாகத் தோன்றுகின்றன.
ஆனால், உடலில் உருவாகும் அனைத்துக் கட்டிகளுமே புற்றுநோய் கட்டிகள் அல்ல. பொதுவாக புற்றுநோய் அறிகுறிகள் தொடர்பாக பலருக்கும் தெளிவாகத் தெரிவதில்லை. இந்தக் கட்டுரையில், புற்றுநோய்க்கான அறிகுறிகளைப் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய் மற்றும் ப்ராஸ்ட்ரேட் சுரப்பிகளில்
அதிக அளவில் வருகிறது. அதுவே, பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை வாய் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
புற்றுநோய் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து, அவை சுற்றியுள்ள மற்ற திசுக்களை அழிக்கின்றன. அதன்பிறகு, அவை ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக உடலின் பிற பகுதிகளுக்கும் பரவி, அங்கும் சேதத்தை ஏற்படுத்தும்போது, உறுப்பின் இயக்கங்கள் பாதிக்கப்படுகிறது.
புற்றுநோய்
புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல. புகையிலை உபயோகித்தல், உணவுமுறைகள், சூரியனின் கதிர்வீச்சு, மாசு மற்றும் நச்சுத்தன்மையுடைய வேலை மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை, வாழ்க்கைமுறை ஆகியவை புற்றுநோய் உருவாகக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மரபணு மாற்றங்கள் பெற்றோர்களிடம் இருந்து பரம்பரையாகவும் வரலாம் என்பதால், குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் இருந்திருந்தாலோ அல்லது தற்போது பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ, குடும்பத்தினர் அனைவரும் புற்றுநோய் பரிசோதனை செய்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். அதேபோல, எச்.ஐ.வி, ஹெபடைட்டிஸ் போன்ற சில வைரஸ்களும், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன.
உடல் எடை இழப்பு
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் எடை இழப்பு என்பது பொதுவான காரணியாக இருக்கிறது.
அடிக்கடி காய்ச்சல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காய்ச்சல் வருவது மிகவும் பொதுவானது. புற்றுநோய் பரவ ஆரம்பித்தப் பிறகு காய்ச்சல் வருவது தொடர்ந்து நடைபெறும். புற்றுநோய் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிப்பதால் அடிக்கடி காய்ச்சல் வரும்
உடல் சோர்வு
தீவிரமான உடல் சோர்வும் புற்றுநோயின் முக்கியமான அறிகுறியாகும். பெருங்குடல் அல்லது வயிற்றுப் புற்றுநோய் ஏற்பட்டால் இரத்த இழப்பை ஏற்படுத்தும் இதனாலும் உடல் சோர்வு ஏற்படலாம்.
சருமத்தில் மாற்றங்கள்
புற்றுநோய்களில் சரும புற்றுநோயைத் தவிர, வேறு சில புற்றுநோய்களும் தோலில் மாற்றங்களை ஏற்படுத்தும்.