இன்று பாடகி பவதாரிணியின் உடலுக்கு இறுதிச்சடங்கு..!!
தமிழ் சினிமாவில் யாராலும் பெற முடியாத புகழை பெற்று திரையுலகின் பொக்கிஷம் என ரசிகர்களால் அன்போடு போற்றப்படுபவர் இசைஞானி இளையராஜ .
இவருக்கு பவதாரணி என்ற மகளும் , கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என இரு மகன்களும் உள்ளனர் .மூவருமே தந்தையை போல் இசை சார்ந்த விஷயங்களில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர் அதிலும் குறிப்பாக யுவனின் இசைக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது .
இதில் தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டும் அதிகம் பாடியுள்ளார் பவதாரிணி . இளையராஜா இசையில் பாரதி படத்தில் பாடிய மயில்போல பொண்ணு பாடலுக்கு சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும் பவதாரிணி பெற்றுள்ளார் .
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரிணி இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பாவதாரணியின் மரணம் இளையராஜாவின் குடும்பத்தை மட்டும் பாதிக்காமல் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை பவதாரிணியின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட தற்போது இளையராஜாவின் வீட்டில் பவதாரிணியின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது .திரை பிரபலங்கள் பலர் பவதாரிணிக்கு அஞ்சலிக்கு செலுத்திய நிலையில், இன்று தேனியில் உள்ள இளையராஜாவின் சொந்த ஊரில் பவதாரிணியின் இறுதிச்சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.