பிரபல நாடொன்றில் முதல் முறையாக திறக்கப்படும் மதுபானக்கடை: கிளம்பும் எதிர்ப்பு
சவுதி அரேபிய நாட்டின் முதல் மதுபான கடை விரைவில் திறக்கப்பட உள்ளது.
முதல் மதுபான கடை
சவுதி அரேபியா நாட்டில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், விரைவில் நாட்டின் முதல் மதுபான கடை திறக்கப்பட இருப்பதாக அந்த நாட்டின் இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவித்துள்ளார்.
சவுதி அரேபியா நாட்டின் ரியாத் நகரில் இந்த மதுபான கடை விரைவில் திறக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
saudi-arabia-opens-first-liquor-store-riyadh, பிரபல நாடொன்றில் முதல் முறையாக திறக்கப்படும் மதுபானக்கடை: கிளம்பும் எதிர்ப்பு
இந்த மதுபான கடை சவுதி அரேபியா நாட்டின் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்கு மதுபானங்களை விற்பனை செய்வதற்காக திறக்கப்பட உள்ளது.
முன்பதிவு அவசியம்
ஆனால் அந்த வெளிநாட்டினரும் மது பெற வேண்டும் மென்றால் நாட்டின் வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி குறியீடு பெற்று, மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
saudi-arabia-opens-first-liquor-store-riyadh, பிரபல நாடொன்றில் முதல் முறையாக திறக்கப்படும் மதுபானக்கடை: கிளம்பும் எதிர்ப்பு
கடந்த 70 ஆண்டு கால வரலாற்றில் சவுதி அரேபியாவில் மதுபான கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் முதல் மதுபான விற்பனை இதுவாகும்.