கலங்கிய கண்களுடன் அக்காவை காண சென்ற யுவன் சங்கர் ராஜா
இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரிணி நேற்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரை காண தம்பி யுவன் சங்கர் ராஜா இலங்கைக்கு விரைந்துள்ளார்.
பவதாரிணி மரணம்
இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகருமான பவதாரிணி இலங்கை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 47வது வயதில் உயிரிழந்துள்ளார்.
கலங்கிய கண்களுடன் அக்காவை காண சென்ற யுவன் சங்கர் ராஜா | Ilayaraja Bhavadharini Death Yuvan Srilanka Visit
புற்றுநோய்க்கு கடந்த 5 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று மாலை 5.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முதற் கட்டத்தில் கடுமையான வயிற்று வலி பிரச்சனை இருந்துள்ளதாகவும். அதற்கு பித்தப்பையில் கல் இருப்பதாக சிகிச்சை வழங்கப்பட்டிருந்தது. அதன்படியே பித்தப்பையில் கல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் சிகிச்சை பெற்று வரும்போது தான் அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இலங்கை சென்ற யுவன் சங்கர் ராஜா
பாடகி பவதாரணியின் உடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பில் உள்ள மலர்சாலைக்கு அவர் வருகைத் தந்துள்ளதாக அங்கிருக்கும் லங்காசிறியின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.