50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வருகிறது லூனா ஸ்கூட்டர் அதுவும் எலக்ட்ரிக் அவதாரத்தில்.. விலை என்ன?

இந்தியாவில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த மொபெட்களில் லூனாவும் ஒன்று, பின்னர் காலப்போக்கில் புதிய வாகனங்களின் வருகை, வர்த்தகம் பாதிப்பு ஆகியவற்றின் மூலம் அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
பல ஆண்டுகள் கழித்து இப்போது லூனா மீண்டும் இந்திய சாலைகளில் கலக்க வருகிறது.2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இ-லூனா என்ற மல்டி யுடிலிட்டி e2W ஸ்கூட்டர் புதிய எலக்ட்ரிக் அவதாரத்தில் கைனடிக் கிரீன் என்ற பெயரில் அறிமுகமாகிறது.
இது லூனாவின் அபிமானிகள் குறிப்பாக மூத்த குடிமக்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில் கைனடிக் கிரீன் இ லூனா புக்கிங்கை நீட்டித்துள்ளது. புதிய ஜெனரேஷன் இ லூனாவை கைனடிக் கிரீன் வெப்சைட்டில் ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
குடியரசு தினம் முதல் புக்கிங் செய்யலாம். இ லூனா ஒரு ஸ்டர்டி டியூரபிள் எலக்ட்ரிக் வாகனமாக இந்திய சாலைகளுக்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டது.பெரிய மெட்ரோ நகரங்களில் மட்டுமல்லாமல் சிறு நகரங்களில் உள்ள சாலைகளிலும் எளிதாக செல்லும் வகையில் அமைந்துள்ளது.
இது கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கும் ஏற்றதாக உள்ளது. வழக்கமான பெட்ரோல் இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக சிறந்ததொரு படைப்பாக விளங்குகிறது என்று கைனடிக் கிரீன் நிறுவனர் மற்றும் சிஇஓ சுலாஜியா ஃபிரோதியா மோட்வானி கூறியுள்ளார்.
விரைவில் அறிமுகமாக உள்ள லூனா இவி பற்றி கைனடிக் கிரீன் எந்தவித விவரங்களையும் இதுவரை வெளியிடவில்லை என்றாலும் அதன் டீஸர் இமேஜ் லூனாவின் வெளிப்புற டிசைனை காட்டுகிறது. புதிய இ ஸ்கூட்டர் அதன் ஒரிஜினல் கைனடிக் லூனாவின் சிறிய பாடியையும் ரவுண்டு ஹெட்லைட்டையும் கொண்டுள்ளது.வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடிய தொழில்நுட்ப விவரக்குறிப்புகள், செயல்திறன் திறன்கள்,
வலுவான அம்சங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன், புதிய பாரத் என்று சுலஜ்ஜா ஃபிரோதியா மோத்வானி கூறினார்.இந்தியாவின் முதல் முற்றிலும் உள்நாட்டு மொபெட் இ-லூனாவின் அதிகபட்ச வேகம் மணிக்கு 52 கி.மீ. கைனடிக் கிரீன் இ லூனா சிறந்த லித்தியம்-அயன் பேட்டரியைப் பயன்படுத்துகிறது.
சார்ஜிங் நேரம் 4 மணி நேரம், இன்றைய டிரெண்டுக்கு ஏற்றவாறு இலூனா வாகனம் அமேசான், பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.இத்தளத்தில் செலுத்தப்படும் தொகையில் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை, சார்ஜர் மற்றும் ஃபேம் மானியம் (மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது) ஆகியவை அடங்கும்.
இந்தத் தொகையில் ஆர்டிஓ பதிவு, காப்பீடு, மற்றும் பாகங்கள் ஆகியவை சேர்க்கப்படவில்லை, இதை டீலரிடம் நேரடியாகச் செலுத்த வேண்டும்.இ லூனாவின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.74,990. ஆனால் பிளிப்கார்ட் இதை தள்ளுபடி போக ரூ.71,990க்கு அளிக்கிறது. ஓஷன் புளூ, மல்பெர்ரி ரெட் ஆகிய இரு நிறங்களில் இ லூனா அறிமுகமாகிறது. ஒரு சார்ஜில் 110 கி.மீ. வரை செல்லலாம்.
2 கி.வாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.இ லூனாவில் டெலஸ்கோபிக் போர்க் பிரன்ட் சஸ்பென்ஷன் மற்றும் இரட்டை ஷாக் ரியர் சஸ்பென்ஷன் உள்ளது. இதன் எடை 96 கிலோ.கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்திய சந்தையில் லூனா நுழைகிறது.