Tamilisai Soundarajan: ‘திராவிட மாடலா? திண்டாட்ட மாடலா? சாப்பாடு இறங்கவில்லை!’ விளாசும் தமிழிசை!
தூத்துக்குடியில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மரியாதைக்குரிய முதலமைச்சர் அவர்கள் ஒருமணி நேர முதலமைச்சர் ஆகிவிட்டார். இவ்வளவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் மட்டுமே முதலமைச்சர் இருந்தார். இது திராவிட மாடலா? திண்டாட்ட மாடலா? என சொல்லும் அளவுக்கு உள்ளது. தேர்தலில் போட்டியிடவே நான் தூத்துக்குடிக்கு வருவதாக அண்ணன் சேகர்பாபு சொல்கிறார். உங்களுக்கு எப்போதுமே ஓட்டுதானா? அதை தாண்டி எதையும் சிந்திக்கவே மாட்டீர்களா?.
தம்பி உதயநிதியை வரும் வழியில் பார்த்தேன். யார் அப்பாவீட்டு காரு இத்தனை போதுன்னு தெரியல, ஒரு முதலமைச்சருக்கு பின்னால் செல்லும் பந்தாவை விட கூடுதலாக உள்ளது. 18ஆம் தேதி மழை கொட்டுகொட்டு என கொட்டிக்கொண்டிருந்த நேரத்தில் மக்களுடன் நான் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு கோவைக்கு சென்று டெல்லி சென்றுவிட்டார்.
நான் மத்திய அரசின் பிரதிநிதிதான். நான் பாஜகவின் செய்தி தொடர்பாளர் கிடையாது, மக்களின் செய்தித் தொடர்பாளர். தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று நிர்மலா சீதாராமன் சொல்லிவிட்டார். ஆனால் தேசிய பேரிடராக அறிவித்தால் என்ன செய்வீர்கள்?, மத்தியக்குழு சொல்லும் நிதியை மத்திய அரசு கொடுக்கும்.
சென்னையில் 4 ஆயிரம் கோடியை வைத்துக் கொண்டு என்ன செய்தீர்கள். முன்னறிவிப்பு செய்யவும், பாதுகாப்பான இடங்களில் மக்களை தங்க வைக்கவும், முதலமைச்சர் வரவும் எதற்கு நிதி வேண்டும். தமிழ்நாடு அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் செய்யவில்லை. முறையாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தால் ஏன் மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.
எனக்கு இன்று சாப்பாடு இறங்கவில்லை. என்னை பொறுத்தவரை என் சகோதர சகோதரிகளுக்காக நான் தூத்துக்குடிக்கு வந்தேன். நான் அறிக்கை தயாரித்து பிரதமரின் கவனத்திற்கும், நிர்மலா சீதாராமனுக்கும் அளிப்பேன் என தமிழிசை கூறினார்.