இதயத் துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலையை கண்காணிக்கும் சென்ஹைசரின் புதிய லேட்டஸ்ட் இயர்பட்ஸ்… விவரங்கள் உள்ளே!
சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்த கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக் ஷோ 2024 (CES 2024) நிகழ்வில் சென்ஹெய்சர் (Sennheiser) நிறுவனம் தனது மூன்று புதிய ஆடியோ தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது. இதில் 2 தயாரிப்பு TWS இயர்பட்ஸ்கள் ஆகும். ஒன்று ஹெட்ஃபோன் ஆகும்.
சென்ஹைசர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4 (Momentum True Wireless 4), மொமென்டம் ஸ்போர்ட் (Momentum Sport,) மற்றும் அக்சென்ட்டம் பிளஸ் (Accentum Plus) ஹெட்போன்ஸ் ஆகிய இந்த மூன்றும் Sennheiser நிறுவனத்தின் புதிய 3 தயாரிப்புகள் ஆகும். சென்ஹைசர் நிறுவனம் மேற்கண்ட ஒவ்வொரு டிவைஸின் வடிவமைப்பு மற்றும் முக்கிய அம்சங்களை CES 2024 நிகழ்வில் வெளிப்படுத்தியது.
இதில் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4 நிறுவனத்தின் “இன்னும் அதிக திறன் கொண்ட இயர்பட்ஸ்” என்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதேசமயம் மொமென்டம் ஸ்போர்ட் இயர்போன்கள் “ஃபிட்னசிற்கு உகந்தது” என குறிப்பிடப்பட்டது. மறுபுறம், அக்சென்ட்டம் பிளஸ் பழைய சென்ஹைசர் அக்சென்ட்டம் தயாரிப்பை விட குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களுடன் வருகிறது.
அனைத்து வகையான யூஸர்களையும் இலக்காக கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4 இயர்பட்ஸ்கள் Qualcomm S5 Sound Gen 2 சிப்பில் இயங்குகிறது. அதே நேரம் மொமென்டம் ஸ்போர்ட் மாடல் ஃபிட்னஸ் ஆர்வலர்களுக்கானது என நிறுவனம் கூறுகிறது. குறிப்பிடத்தக்க அம்சமாக Momentum Sport மாடலானது ஒர்கவுட்ஸ்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்படவில்லை, மாறாக இதய துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலையை கண்காணிக்கும் அம்சத்துடன் இது வருகிறது. அந்த வகையில் ஹார்ட் ரேட் மற்றும் பாடி டெம்ப்ரேச்சரை கண்காணிக்க கூடிய வகையில் வரும் சென்ஹைசர் நிறுவனத்தின் முதல் ஆடியோ தயாரிப்பு இதுவாகும்.
சென்ஹைசரின் Momentum Sport இயர்பட்ஸின் விலை எவ்வளவு?
Momentum Sport TWS இயர்பட்ஸ்கள் வரும் ஏப்ரல் 9 முதல் சந்தையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ள சென்ஹைசர் நிறுவனம் போலார் பிளாக், பர்ன்ட் ஆலிவ் மற்றும் மெட்டாலிக் கிராஃபைட் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய இயர்பட்ஸ்களின் விலை $329.95 USD ஆகும். அதாவது இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ.27,400 ஆகும்.
Momentum Sport ட்ரூ வயர்லஸ் இயர்பட்ஸ்களின் முக்கிய அம்சங்கள்:
சென்ஹைசர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களின் படி, இந்த இயர்பட்ஸ்களில் ஃபோட்டோபிளெதிஸ்மோகிஃராபி (PPG) ஹார்ட் ரேட் சென்சார் மற்றும் பாடி டெம்ப்ரேச்சர் சென்சார் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சென்சார்கள் பிரபலமான ஃபிட்னஸ் ஆப்ஸ் மற்றும் டிவைஸ்களுக்கு முக்கியமான தரவை வெளியிடும். ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஹெல்த், கார்மின் வாட்ச், கார்மின் கனெக்ட், ஸ்ட்ராவா மற்றும் பெலோடன் போன்ற டிவைஸ்கள் மற்றும் சர்விஸ்கள் இந்த இயர்போன்களுடன் இணக்கமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இது போன்ற பலவற்றை உள்ளடக்கிய பல பிரபலமான ஸ்போர்ட் டிவைஸ் மற்றும் ஆப்ஸ்களை பயன்படுத்தி மொமென்டம் ஸ்போர்ட்டின் ஹார்ட் ரேட் டேட்டாவை மீட்டெடுக்கலாம். முதல் முறையாக Polar நிறுவன தயாரிப்பு அல்லாத இந்த தயாரிப்பில் போலார் நிறுவனத்தின் பயோசென்சிங் திறன்கள் மற்றும் தரவு பகுப்பாய்வுகளுக்கான முழு அணுகலை யூஸர்கள் இதில் பெற முடியும். ட்ரெயினிங்கின் போது ரியல்-டைம் நுண்ணறிவுகளை வழங்கும் உடல் வெப்பநிலையை அளவிடுவதும் இதில் அடங்கும்.
சென்ஹைசரின் மொமண்டம் ஸ்போர்ட் இயர்போன்ஸ் acoustic relief channel மற்றும் செமி-ஓபன் டிசைனை கொண்டுள்ளது. இது யூஸர்கள் உடற்பயிற்சி மற்றும் பிற விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அவர்களின் ஃபுட்ஸ்டெப் சத்தம், சுவாசம் மற்றும் உடலில் ஏற்படும் பிற கவனச்சிதறல்களை குறைக்க உதவுகிறது. மேலும் இந்த இந்த இயர்பட்ஸ்கள் அட்ஜஸ்ட்டபிள் டிரான்ஸ்பரன்சி மோட், ஆன்டி-விண்ட் மோட் மற்றும் அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலிங் (ANC) மோட் உள்ளிட்டவற்றை சப்போர்ட் செய்கிறது.
வியர்வை மற்றும் நீருக்கு எதிராக IP55 சர்டிபிகேஷனுடன் இவை வருகின்றன. தீவிரமான வொர்க்அவுட்டின் போது ஷாக்-ப்ரூஃப் சேசிஸ் மற்றும் க்ளாக்-ரெசிஸ்டென்ட் இயர் டிப்ஸ்-களையும் இது கொண்டுள்ளது. இதன் Qi-enabled சார்ஜிங் கேஸ் USB Type-C மற்றும் Qi வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. பேட்டரி லைஃபை பொறுத்தவரை, இந்த இயர்பட்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் ஆறு மணிநேரம் வரை நீடிக்கும் என்றும் அதே நேரம் கேஸுடன் கூடுதலாக 18 மணிநேரம் அதாவது மொத்தம் 24 மணி நேரம் பேட்டரி லைஃபை பெறலாம்.