காலையில் CEO, இரவில் கேப் ஓட்டுனர்.. OLA நிறுவனத்தில் இதெல்லாம் நடக்குதா..?!
ஓலா கேப்ஸின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி ஹேமந்த் பக்ஷி, வாடிக்கையாளர் அனுபவத்தையும், எதிர்பார்ப்புகளையும் நன்றாகப் புரிந்துகொள்வதற்காக இரவில்.
ஓலா கேப் ஓட்டுவதாகவும், நிறுவனத்திற்காக மூன்லைட் செய்வதாக கூறியுள்ளார்.முன்னாள் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிர்வாகியாக இருந்த ஹேமந்த் பக்ஷி, தற்போது ஓலா குழுமத்தின் டாக்சி சேவை நிறுவனமான ANI டெக்னாலஜிஸ்-ன் ஓலா கேப்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Ola Cabs நிறுவனம் மூன்று பிரிவுகளாக மறுசீரமைக்கப்படுகிறது ரைடு ஹெய்லிங் மற்றும் மொபிலிட்டி, நிதி சேவைகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் இ-காமர்ஸ் ஆகிய பிரித்துத் தனிப்பட்ட முறையில் நிர்வாகம் செய்யப்படுகிறது.
ஓலா நிறுவனர் மற்றும் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால், ஓலா எலக்ட்ரிக் வர்த்தகத்திலும், அதன் வளர்ச்சியிலும் அதிகப்படியான கவனம் செலுத்தி வரும் காரணத்தால் ஓலா கேப்ஸ் உயர் பதவியில் இருந்து, நிர்வாகப் பணியில் இருந்து விலகி இருக்கிறார்.
டாக்சி சேவை நடவடிக்கைகளுக்குத் தலைமை வகிக்கும் ஹேமந்த் பக்ஷி தனது நிறுவனத்தின் சேவைகளையும், வாடிக்கையாளர்கள் குறித்து வெறும் டேட்டா பாயின்ட்களை மட்டும் வைத்துக்கொண்டு கணக்கிடாமல் களத்தில் இறங்கி அனுபவத்தைப் பெற முடிவு செய்துள்ளார்.
இதனால்தான், வார இறுதி நாட்களில் ஓலா கேப் ஓட்டுநராக, இரவு நேரங்களில் பெங்களூரில் சேவை அளித்து வருகிறார். இதேபோல் பாவிஷ் அகர்வால்-ம் செய்துள்ளார்.
இவர் மட்டும் அல்லாமல் சோமேட்டோ தீபேந்தர் கோயல், பிளிப்கார்ட் சச்சின் பன்சால் ஆகியோரும் சேவை களத்தில் இறங்கி அவ்வப்போது அனுபவத்தைப் பெற்றுள்ளனர்.ஐபிஓ-க்கு முன்பு இப்படியொரு சாதனை படைத்த ஓலா.. முதலீட்டாளர்களே உஷார்..!!
ஜனவரி 25 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், அனுபவத்தைப் புரிந்து கொள்வதற்காக வார இறுதி நாட்களில் பெங்களூரு முழுவதும் ரைட்-ஹெய்லிங் சேவையை வழங்குவதற்காகத் தனது காரை எடுத்துச் செல்கிறேன் என்று பக்ஷி கூறினார்.
ஹேமந்த் பக்ஷி ஓலா நிறுவனத்தின் சிஇஓ-வாக இணைவதற்கு முன்பு யூனிலீவர் இந்தோனேசியாவின் மார்க்கெட்பிளேஸின் நிர்வாகத் துணைத் தலைவராகவும், தலைவராகவும் இருந்தார். இவர் ஐஐஎம்-அகமதாபாத் மற்றும் ஐஐடி-பாம்பேயில் படித்தவர், நான்கு மாதங்களுக்கு முன்பு ஓலாவில் சேர்ந்தார்.