அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. அரசியல் கட்சிக்கு நன்கொடை கொடுத்தா 100% வரி விலக்கு!
அரசியல் கட்சிகளுக்கு கோடி கோடியா பணம் எங்கிருந்து கிடைக்கிறது என யோசனை செய்ததுண்டா? பெரும்பாலும் நன்கொடைகள் மற்றும் தேர்தல் பத்திரங்கள் மூலமே அரசியல் கட்சிகளுக்கான நிதி கிடைக்கிறது.
இந்த தொகைக்கு 100% வரி விலக்கு அளிக்கும் பிரிவு தான் 80GGB.வருமான வரி சட்டத்தின் பிரிவு 80GGB: இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஏராளமான அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அப்படி தங்களுக்கு பிடித்த அரசியல் கட்சிக்கு நன்கொடை அளித்து நிறுவனங்கள் வருமான வரி விலக்கு பெற்றுக் கொள்ளலாம்.
அதற்கு வழிவகை செய்யும் ஒரு பிரிவு தான் 80GGB. நிபந்தனைகள் என்னென்ன?இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்லது தேர்தல் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கும் இந்திய நிறுவனங்கள் மட்டுமே வரி விலக்கு கோர முடியும்.நன்கொடை பெறும் அரசியல் கட்சி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 பிரிவு 29A இன் கீழ் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.தேர்தல் அறக்கட்டளை என்பது.
நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவு 8இன் கீழ் உருவாக்கப்பட்ட லாப நோக்கமற்ற நிறுவனமாக இருக்க வேண்டும்.தேர்தல் அறக்கட்டளைகள் மற்ற நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்று , பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம்.யாரெல்லாம் வழங்க முடியாது?அரசு நிறுவனங்களால் நன்கொடை வழங்க முடியாது, அதே போல தொடங்கி 3 ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்த நிறுவனங்களும் வழங்க முடியாது.
இதை தவிர இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களும் பங்களிப்பு தரலாம்.ரொக்கத்துக்கு அனுமதியில்லை:அரசியல் கட்சிகளுக்கு வரும் நிதி தொடர்பான விவரங்கள் வெளிப்படைத் தன்மையுடன்.
இருக்க வேண்டும் என்பதற்காக போடப்பட்ட மிக முக்கியமான நிபந்தனைஇது. ரொக்கமாக தரும் பணத்திற்கு வரி விலக்கு கோர முடியாது. அதுவே காசோலை, வரைவோலை மற்றும் மின்னணு பரிமாற்றம் முறையில் பணம் அனுப்பி இருந்தால் வரிச் சலுகை பெற்றுக் கொள்ளலாம்.என்னென்ன பொருந்தும்?ஒரு அரசியல் கட்சி.
அல்லது வேறு அரசியல் நோக்கத்திற்காக மக்களின் ஆதரவை பெறக்கூடிய அல்லது மாற்றி அமைக்கக்கூடிய செயல்களில் ஈடுபடும் ஒரு நபருக்கு வழங்கப்படும் வணிக நன்கொடை அல்லது சந்தா.அரசியல் கட்சிகள் சார்பாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தயாரிக்கப்படும் பிரசுரங்கள்,