மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள்… பிரித்தானிய நிபுணரின் சில்லிடவைக்கும் துல்லியமான கணிப்பு
மூன்றாம் உலகப்போர் துவங்கினால், அது என்று துவங்கும், யாரால் துவக்கப்படும் என்பது குறித்த சில்லிடவைக்கும் தகவல்களைக் கொடுத்துள்ளார் பிரித்தானிய நிபுணர் ஒருவர்.
போர் எப்போது துவங்கும்? யார் துவக்குவார்?
பக்கிங்காம் பல்கலைப் பேராசிரியரான Anthony Glees (75), புடின் மூன்றாம் உலகப்போரைத் துவக்கும் நாள் என ஒரு நாளை கணித்துள்ளார். அதாவது, ரஷ்யாவில் பொதுத்தேர்தல் இந்த ஆண்டு, மார்ச் மாதம் 17ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. ரஷ்யாவைப் பொருத்தவரை, தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே புடின் வெற்றி பெற்றுவிட்டதாகவே கூறமுடியும்.
ஆக, 2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 18ஆம் திகதி மூன்றாம் உலகப்போர் துவங்கும் என கணித்துள்ளார் பேராசிரியர் ஆண்டனி.
மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள்… பிரித்தானிய நிபுணரின் சில்லிடவைக்கும் துல்லியமான கணிப்பு | World War Iii Begins Prediction Of British Expert
ஆனால், போரைத் துவக்கப்போவது புடின் இல்லை என்கிறார் அவர். புடினின் கைப்பொம்மையாக இருக்கும் பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர்தான் (Aleksandr Lukashenko) போரைத் துவக்குவார் என்கிறார் அவர். அதாவது, அலெக்சாண்டர் தன் பக்கத்து நாடுகளாகிய போலந்து அல்லது உக்ரைன் தன் நாட்டுக்குள் ஊடுருவியதாக குற்றம் சாட்டி, அதற்கு பதிலடி கொடுப்பதாகக் கூறி சண்டையைத் துவக்க, அப்படித்தான் போர் துவங்கும் என்கிறார் பேராசிரியர் ஆண்டனி.
போரை எதிர்கொள்ள என்ன செய்யவேண்டும்?
போர் எப்போது துவங்கும், யார் துவக்குவார் என்று கூறியதுடன் நிறுத்தவில்லை பேராசிரியர் ஆண்டனி. போரை எதிர்கொள்ள என்ன செய்யவேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார் அவர்.