பார்வைத் திறன் சோதனை: காய்ந்த இலை சருகுகளில் மறைந்திருக்கும் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் இந்த படத்துல மறைந்திருக்கிற விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே பரபரப்படைந்து வெறித்தனமாக விடைகளைத் தேடி வருகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காய்ந்த இலை சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை. கண்டுபிடிங்க கெத்து காட்டுங்க பார்க்கலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்துள்ள விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டுத் தேடுகிற கதைதான். இன்னும் சரியாக சொல்வதென்றால் தோள் மேலே ஆட்டுக்குட்டியை வைத்துக்கொண்டு ஊரெல்லாம் தேடுவது போல இருக்கும். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோடித்து தேடினால் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.