லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் கவனம் பெற்ற இளம் நடிகை… யார் இவர்?

லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் இந்து மற்றும் இஸ்லாம் மத நல்லிணக்கம் மைய கருத்தாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா மற்றும் அவரது குடும்பத்தினர், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா, நடிகைகள் தன்யா, அனந்திகா சனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட நடிகை அனந்திகா சனில்குமார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், கடந்த 2022-ல் தெலுங்கில் வெளியான ராஜமுந்திரி ரோஸ்மில்க் திரைப்படத்தில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து மேட் மற்றும் விக்ரம் பிரபுவின் ரெய்டு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் லால் சலாம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதிக்க உள்ளார்.