3 ஆண்டுகளாக சனா ஜாவேத்துடன் உறவு.. காத்திருந்த சானியா மிர்சா.. திருந்தாத சோயப் மாலிக்.. பரபர தகவல்!

3 ஆண்டுகளாக நடிகை சனா ஜாவேத்துடன் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் உறவில் இருந்ததாக பாகிஸ்தான் பாட்கேஸ்ட் சேனல் ஒன்று பரபர தகவலை வெளியிட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை, இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2018ஆம் ஆண்டு இஷான் என்று மகன் பிறந்த நிலையில், தற்போது இருவரும் விவாகரத்து செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சானியா மிர்சாவை பிரிந்த சில மாதங்களிலேயே சோயப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்துள்ளார்.

அவர்கள் திருமணம் செய்த புகைப்படங்கள் வெளியான போது தான், சோயப் மாலிக் – சானியா மிர்சா இருவரும் பிரிந்தது தெரிய வந்தது. சானியா மிர்சாவின் பிரிவுக்கு, சோயப் மாலிக்கின் திருமணம் மீறிய உறவு காரணம் என்று அவரது சகோதரி வெளிப்படையாகவே கூறியிருந்தார். இதனால் பாகிஸ்தானில் இருந்தும் சானியா மிர்சாவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் சோயப் மாலிக் – சனா ஜாவேத் உறவு குறித்து பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாட்கேஸ்ட் சேனலான சாமா டிவி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத் அவரது கணவர் உமைர் ஜாஸ்வாலை 2020ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பின் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத் – சோயப் மாலிக் இருவரும் திருமணம் மீறிய உறவில் இருந்தனர். 3 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் உறவு இருந்து வந்துள்ளது.

பாட்கேஸ்ட் சேனல் தரப்பில் மாலிக் எப்போது சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டாலும், அவர் உடனடியாக நடிகை சனா ஜாவேத் பங்கேற்றால் மட்டுமே வருவேன் என்று நிபந்தனை விதிப்பார். இவர்கள் உறவு ஒரு கட்டத்திற்கு முழு ஈடுபாட்டுடன் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் சோயப் மாலிக் உடனான உறவு குறித்து சனா ஜாவேத்தின் முன்னாள் கணவர் உமைர் ஜாஸ்வாலுக்கு தெரியாது என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் சோயப் மாலிக் – சனா ஜாவேத் உறவு குறித்து சானியா மிர்சா, அவரது குடும்பத்தினர் மற்றும் சோயப் மாலிக் குடும்பத்தினருக்கு நன்றாக தெரியும் என்றும், அதன் பின் தவறை சரி செய்து சோயப் மாலிக் திரும்பி வருவார் என்று சானியா மிர்சா காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் சோயப் மாலிக் யார் சொல்லியும் கேட்கவில்லை என்று பாட்கேஸ்ட் சேனல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு மகனின் பிறந்தநாளை சானியா மிர்சா – சோயப் மாலிக் இருவரும் துபாயில் கொண்டாடினார்கள். அதற்கு முன்பாகவும் சோயப் மாலிக் – சானியா மிர்சா இருவரும் விவாகரத்து செய்ய போவதாக தகவல் வெளி வந்தன. ஆனால் ஓராண்டுக்கு பின் இவர்களின் திருமண உறவு முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *