முடிவுக்கு வந்த இந்திய பேட்டிங்.. கொத்தாக வீழ்ந்த 3 பேட்ஸ்மேன்கள்.. ஒரே ஓவரில் ஜோ ரூட் சம்பவம்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 436 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. 2வது நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 421 ரன்களை குவித்திருந்தது. இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 81 ரன்களுடனும், அக்சர் படேல் 35 ரன்களுடன் 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் மற்றும் மார்க் அவுட் கூட்டணி அட்டாக் செய்தது.

நேற்றைய ஆட்டத்தில் ஜோ ரூட் காலை நேரத்தில் சிறப்பாக வீசி விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். அதேபோல் ஜடேஜாவை வீழ்த்த ஷார்ட் பால் ஆயுதத்ததுடன் மார்க் வுட் அட்டாக் செய்தார். அதில் ஒரு பந்து ஜடேஜாவின் பேட்டில் பட்டு எட்ஜாகி ஹெல்மெட்டில் அடித்து சென்றது. இதனால் ஜடேஜாவின் கவனம் சிறிது சிதறியது. இதன் பின் இங்கிலாந்து அணியின் ஜாக் லீச் ரன்களை விட்டுக் கொடுக்காமல் கட்டுக்கோப்புடன் அட்டாக் செய்தார்.

இதனால் முதன்மை பவுலர்களான இருவரையும் அட்டாக்கில் கொண்டு வந்தார் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். இதனால் ஜடேஜா மற்றும அக்சர் படேல் இருவரும் ரன்கள் சேர்க்க முடியாமல் திணறினர். இருப்பினும் ஜாக் லீச் வீசிய ஒரு ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசி அக்சர் படேல், அழுத்தத்தை குறைத்தார். இருப்பினும் ஜடேஜா 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜோ ரூட் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து வந்த பும்ரா அடுத்த பந்திலேயே போல்டாகி வெளியேற, இந்திய அணி 436 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து ரெஹான் அஹ்மத் வீசிய அடுத்த ஓவரிலேயே அக்சர் படேல் 44 ரன்களில் போல்டாகி வெளியேறினார். இதனால் இந்திய அணி 436 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டாகியது. அதேபோல் இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

மேலும் இதுவரை இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற போட்டிகளில் ஒரேயொரு முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணி வெற்றிபெற வாய்ப்பில்லை என்றே ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். மேலும் இந்திய அணியின் 3 வீரர்கள் முதல்முறையாக சதமடிக்க முடியாமல் 80 முதல் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்திருப்பது முதல்முறையாகும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *