தென் இந்தியாவிற்கே பெருமை… முதல் முறையாக இப்படி ஒரு ஷோரூமை டாடா திறக்க போகுதா… எந்த நகரம் தெரியுமா?
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தையில் மிகவும் வலுவாக இருந்து வரும் ஒரு நிறுவனம் டாடா மோட்டார்ஸ் (Tata Motors). தற்போதைய நிலையில் மொத்தம் 4 எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து கொண்டுள்ளது.
அவை டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), டாடா டிகோர் இவி (Tata Tigor EV), டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் டாடா பன்ச் இவி (Tata Punch EV) ஆகியவை ஆகும். இதில், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்பெல்லாம் ஐசி இன்ஜின் (IC Engine) கார்களை விற்பனை செய்யும் அதே ஷோரூம்கள் மூலமாகதான் எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனை செய்து வந்தது. ஆனால் இந்த நிலைமை சமீபத்தில் மாற்றப்பட்டது. ஆம், எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதற்கென்று பிரத்யேகமான ஷோரூம்களை டாடா நிறுவனம் சமீபத்தில் திறந்தது.
ஹரியானா (Haryana) மாநிலம் குருகிராம் (Gurugram) நகரில் அந்த ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. குருகிராம் நகரில் மொத்தம் 2 எலெக்ட்ரிக் கார் ஷோரூம்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திறந்துள்ளது. இதை தொடர்ந்து நாடு முழுக்க இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார் ஷோரும்களை திறப்பதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த வரிசையில் தென் இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஷோரூம், கேரளா (Kerala) மாநிலம் கொச்சியில் (Kochi) திறக்கப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடிய விரைவில் இந்த எலெக்ட்ரிக் கார் ஷோரூம் திறக்கப்பட்டு விடும் என கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து நாடு முழுக்க இன்னும் பல்வேறு நகரங்களில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதற்கு என்று பிரத்யேகமாக தனி ஷோரூம்களை திறக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும் காலங்களில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதில், டாடா அல்ட்ராஸ் இவி (Tata Altroz EV), டாடா கர்வ் இவி (Tata Curvv EV) மற்றும் டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். நிறைய எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், அவற்றை விற்பனை செய்வதற்கான பிரத்யேக ஷோரூம்களும் அவசியமான ஒன்றாகவே கருதப்படுகிறது.