டெஸ்லாவின் அடி மடியிலேயே கைவைத்த ஆப்பிள்! புது காரை களம் இறக்க ரெடியாகிட்டாங்க!
ஆப்பிள் நிறுவனம் முதல் எலெக்ட்ரிக் காரை வரும் 2028 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்களாக ஆப்பிள் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து அறிமுகப்படுத்தும் என்ற செய்திகள் வெளியாகி வந்த நிலையில் இது குறித்து பெரிய அளவில் அப்டேட் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது மிக முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
செல்போன் தயாரிப்பில் மிக முக்கிய நிறுவனமாக ஆப்பிள் இருக்கிறது. உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் அடுத்தடுத்த அப்டேட்களை பெறுவதற்கும் புதிய புதிய செல்போன்களை வாங்குவதற்கும் மக்கள் மத்தியில் கடும் போட்டி நிலவு வருகிறது. இந்நிலையில் நிறுவனம் தொழில்நுட்பத்தில் மேம்பட்டு வரும் நிலையில் எலெக்ட்ரிக் காரை தயாரிக்கப் போவதாக செய்திகள் வெளியானது.
ஆப்பிள் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் குறித்த புகைப்படங்கள் கான்செப்ட் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது. ஆப்பிள் ரசிகர்கள் பலர் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சியை பற்றி பேசி வந்தனர். சொல்லப்போனால் முதல் முதலாக ஆப்பிள் நிறுவனம் தான் தானியங்கி எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் டெஸ்லா அதற்கு முன்பாக தனது தயாரிப்பு அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் ஓட்டுநரே இல்லாமல் தானியங்கியாக இயங்கும் எலெக்ட்ரிக் காராக உருவாக்கப்படும் என செய்திகள் வெளியானது. ஆனால் அது குறித்து பெரிய அளவில் அப்டேட் எதுவும் இல்லை. ஆப்பிள் கார் உண்மையிலேயே தயாரிக்கப்படுகிறதா அல்லது இது வெறும் செய்திக்காக வெளியிட்ட புகைப்படமா என்று கூட மக்கள் மத்தியில் சந்தேகம் இருந்தது.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தற்போது தனது எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க பல்வேறு முயற்சிகளை செய்தும் அதில் பல பிரச்சனைகள் வந்தது. தொழில்நுட்ப ரீதியாக நிறுவனம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்ததால் எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி நிறுவனம் வரும் 2028-ம் ஆண்டு தான் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தும் என எதிர்க்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே நிறுவனம் 2026 ஆம் ஆண்டில் தனது எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது கூடுதலாக இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என அறிவித்துள்ளது. இது ஆப்பிள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் புராஜெக்ட் டைட்டன் என்ற பெயரில் இந்த எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிறுவனம் தற்போது லெவல் 4 அடாஸ் தொழில்நுட்பத்துடன் இந்த காரை தயாரிக்க முடிவு செய்துள்ளது. டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே தயாரித்த தானியங்கி எலெக்ட்ரிக் கார் லெவல் 2 அடாஸ் சிஸ்டத்துடன் இருக்கிறது. அதாவது இந்த காரில் பயணிக்கும் போது டிரைவர் எப்பொழுதும் அலர்டாக இருக்க வேண்டும்.
எப்பொழுது வேண்டுமானாலும் காரை கண்ட்ரோல் செய்யும் நிலையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இந்த காரை ஓட்ட முடியும். ஆனால் ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வெளியிட போகும் புதிய எலெக்ட்ரிக் கார் அடாப் லெவல் 4 தொழில்நுட்பத்தில் இயங்கும் காராக வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் காரில் டிரைவிங் செய்வதற்கு எந்த விதமான ஆப்ஷனும் இருக்காது. முழுமையாக ஆட்டோமேட்டிக்கில் இயங்கும் காராக இருக்கும் எதுவுமே இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் காரை உருவாக்க ஏகப்பட்ட செலவுகளை செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் இன்ஜினியரிங் பாகங்கள் கார் உதிரி பாகங்கள் கம்ப்யூட்டர் சிஸ்டம் காரை பரிசோதனை செய்வதற்கான சாலைகள் என ஏகப்பட்ட செலவுகளை செய்துள்ளது. இதனால் ஆப்பிள் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் காரை பெரிய அளவில் ஏற்பட்டு வருகிறது.