1 இல்ல 2 இல்ல மொத்தம் 234 கடிதங்கள்.. ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்.!!!
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ரசிகரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். கீர்த்தி சுரேஷின் தீவிர ரசிகர் கிருஷ்ணா.
கீர்த்தி சுரேஷுக்கு இதுவரை 234 கடிதங்கள் எழுதியுள்ளார். ஆனால் அவரிடம் இருந்து இதுபற்றி பதில் ஏதும் வரவில்லை. அந்த கடிதத்தை கிருஷ்ணா எக்ஸ் தளத்தில் பதிவிட்டு கீர்த்தி சுரேஷை டேக் செய்துள்ளார்.
அவரது கடிதங்களைக் கண்டு இன்ப அதிர்ச்சியடைந்த கீர்த்தி சுரேஷ், 234 கடிதங்களுக்கும் சேர்த்து ஒரே பதிலளித்துள்ளார். ‘தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும்’ எனக்கூறியுள்ள அவரது ட்வீட் வைரலாகி வருகிறது.