கொடூர லுக்கில் பாபி தியோல்! கங்குவா படத்தின் புதிய போஸ்டர்!
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார்.
பிரபல நடிகரான பாபி தியோல் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ரெடின் கிங்ஸ்லி, பி.எஸ். அவினாஷ், கோவை சரளா, யோகி பாபு, ஆராஷ் ஷா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்க்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த திரைப்படம் 10 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் எப்போதுதான் வெளியாகும் என படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் ஒரு அப்டேட் நாளை வரும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று படத்தில் வில்லனாக நடிக்கும் பாபி தியோல் பிறந்தநாள் என்பதால் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய கதாபாத்திரத்திற்கான போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் மிரட்டலான கொடூர லுக்கில் நடிகர் இருக்கிறார். கண்டிப்பாக அவருடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்படும் என தெரிகிறது.