நான் சாகும் வரை முஸ்லீம் தான்.. இணையத்தில் வைரலாகும் முக்கிய பதிவு.!!
80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து தனது அழகால் ரசிகர்களை கட்டிபோட்டவர் நடிகை குஷ்பூ.
இவர் கடந்த 2001 ஆம் வருடம் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திகா என்ற மகள்களும் உள்ளனர். இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தாமல் வெள்ளிதிரையிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார் குஷ்பூ.
இந்நிலையில் சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பூ, காங்கிரஸில் இருந்த சமயத்தில் ,’ நான் ஒரு முஸ்லீமாக பிறந்தேன். இறக்கும் போதும் முஸ்லீமாகவே இறப்பேன். அனைவருக்கும் சம உரிமை, பன்முகத்தன்மை அடிப்படையில் வாழ்கிறேன் என்று பாஜகவை விமர்சித்திருந்தார். அதை தற்போது பகிர்ந்த நெட்டிசன் ஒருவருக்கு “நான் சாகும் வரை முஸ்லீம் தான் பிரதர். நான் மதம் மாறவும் இல்லை. மாறவும் மாட்டேன்.’ என்று அளித்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.