Thalapathy 70: விஜய் – ஷங்கர் கூட்டணியில் இணையும் இன்னொரு பிரம்மாண்டம்… தளபதி 70 தாறுமாறு தான்!
சென்னை: விஜய்யின் 69வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே 70வது படத்தின் இயக்குநர் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தளபதி 70 விஜய் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் என சொல்லப்படுகிறது. இந்தக் கூட்டணியில் இன்னொரு பிரம்மாண்டமும் இணையவுள்ளதாம்.
விஜய் – ஷங்கர் கூட்டணி
பீஸ்ட், வாரிசு, லியோ, இப்போது கோட் என கொஞ்சம் ஓய்வே இல்லாமல் அசுர வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார் விஜய். லியோ வெளியாவதற்கு முன்பே தளபதி 68 படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. அதேநேரம் அதிகம் பிரேக் விடாமல் நடைபெற்ற கோட் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாம். இதனையடுத்து தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.
இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த வரிசையில் விஜய்யின் 70வது படத்தை ஷங்கர் இயக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டணி இதற்கு முன்பு நண்பன் படத்தில் இணைந்தது. 3 இடியட்ஸ் என்ற இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக நண்பன் உருவாகியிருந்தது. அதன்பின்னர் மீண்டும் ஒரு மெகா பட்ஜெட் படத்தில் இணைய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அதன்படி விஜய் – ஷங்கர் இணையும் தளபதி 70 திரைப்படம் பொலிட்டிக்கல் ஜானரில் உருவாகவுள்ளதாம். விஜய் அரசியலுக்கு வரவிருப்பதால் அதனை மனதில் வைத்தே செம்ம மாஸ்ஸான கதையுடன் ஷங்கர் காத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது முதல்வன் 2ம் பாகமாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியிருந்தது. பாக்ஸ் ஆபிஸிலும் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்தப் படத்தை DVV என்டர்டெயின்மென்ட் தயாரித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து விஜய் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் தளபதி 70 படத்தையும் DVV என்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளதாம். இதற்காக பெரிய பட்ஜெட்டையும் அந்நிறுவனம் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் 2026ம் ஆண்டு தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்பாக விஜய்யும் அரசியலில் களமிறங்குவதை அபிஸியலாக அறிவித்துவிடுவார் எனவும், அதன்பின்னரே தளபதி 70 தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.