ஃபேன்டஸி காமெடியாக உருவாகிறது டபுள் டக்கர்..!!
டபுள் டக்கர் ஒரு ஃபேன்டஸி காமெடி படம்.’டபுள் டக்கர்’ படத்தை ஏர் ஃபிளிக் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இதில் தீரஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.கதாநாயகியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் இப்படத்தில் கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன், முனிஷ்காந்த், சுனில் ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.கௌதம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.அறிமுகமான மீரா மஹதி இயக்கிய ஃபேன்டஸி காமெடி படம்.
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“இந்தப் படத்தில் ஹீரோ தீரஜுடன் 2 அழகான அனிமேஷன் கதாபாத்திரங்கள் நடிக்கிறார்கள்.இது பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும்” என்கிறார்கள் படக்குழு.