சிங்கப்பூர் சலூனின் முதல் நாள் வசூல் இத்தனை கோடிகளா? வைரலாகும் தகவல்!
அவ்வாறு அவர் நடித்த எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் உள்ளிட்ட படங்கள் வெற்றியடைந்தன. இந்த நிலையில் தற்போது சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். இதில் ஆர்.ஜே.பாலாஜி உடன் சத்யராஜ் இரண்டாவது முறையாக நடித்துள்ளார். இதற்கு முன் அவர்கள் கூட்டணியில் ‘வீட்ல விசேஷம்’ படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதேபோல் ஆர்.ஜே.பாலஜி சத்யராஜ் உடன் மலையாள நடிகர் லால் முக்கிய கதாபாத்திரத்துள்ளார்.
கிஷன் தாஸ், ஆன் ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கிடையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா ஆகியோர், இப்படத்தில் சிறப்புத் தோற்றங்களில் தோன்றியுள்ளனர். இந்நிலையில் இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
… இன்ஸ்டா லைவில் ரசிகர் கேட்ட கேள்வி… சிவகார்த்திகேயனின் நச் பதில்!
சிங்கப்பூர் சலூன் ஒரு இளம் சிகை அலங்கார நிபுணரைப் பற்றிய வெற்றிக்கதை ஆகும். தனது கிராமத்தில் ஒரு முடிதிருத்துபவரால் ஈர்க்கப்பட்டு, நிறைய கனவுகளைக் கொண்டிருக்கும் இளைஞர் சிகை அலங்கார ஜெயித்தாரா என்பதை இப்படம் கூறுவதாகத் தெரிகிறது.
சிங்கப்பூர் சலூன் வெற்றிகரமாக ரிலீஸ் ஆகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. முதல் நாள் முடிவில் சிங்கப்பூர் சலூன் உலகம் முழுவதும் ரூ. 2 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த பி.மாதவன் சினிமா கற்று, 1963 இல் மணி ஓசை படத்தை இயக்கினார். படம் சுமாராகப் போனாலும், இயக்குநரின் திறமையில் நம்பிக்கை வைத்து, தனது அன்னை இல்லம் படத்தை இயக்கும் பொறுப்பை சிவாஜி பி.மாதவனுக்கு வழங்கினார். படம் வெற்றிபெற்றதும், எம்ஜி ராமச்சந்திரன் அழைத்து, தனது தெய்வத்தாய் படத்தை இயக்கும் பொறுப்பை மாதவனிடம் ஒப்படைத்தார். இயக்குநர் வேலையில் எம்ஜி ராமச்சந்திரன் தலையிடுவது பி.மாதவனுக்கு பிடிக்கவில்லை. இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படம் நின்றது. பிறகு, இயக்குநர் வேலையில் தலையிடுவதில்லை என்ற எம்ஜி ராமச்சந்திரனின் உத்தரவாதத்தின் மேல், படப்பிடிப்பு தொடர்ந்தது. இனி எம்ஜி ராமச்சந்திரனுடன் பணிபுரிவதில்லை என மாதவனும், மாதவன் படத்தில் நடிப்பதில்லை என எம்ஜி ராமச்சந்திரனும் பரஸ்பரம் சபதம் செய்து கொண்டனர்.