அதே ஸ்டைலு.. அதே உற்சாகம்.. வைரலாகும் ரஜினி பேரனின் சல்யூட் வீடியோ

லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்தின் பேரன், ரஜினி ஸ்டைலில் சல்யூட் அடித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்திற்கு 2 மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியின் 2 மகன்களையுமே மக்களுக்கும் அதிகம் தெரியும். தற்போது இணையத்தை கலக்கி வரும் இந்த சிறுவன் ரஜினிகாந்தின் 2வது மகளாக சவுந்தர்யாவின் மகனாவான்.

இயக்குனரும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினிகாந்தின் மனைவி, 2 மகள்கள் பேரக்குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது சீட்டில் அமர்ந்திருந்த சௌந்தர்யாவின் மகன், ஸ்டைல் ஸ்டைல் தான் பாடலுக்கு தனது தாத்தாவின் பாணியில் அழகாக சல்யூட் அடித்து மாஸ் காட்டியுள்ளார்.

https://twitter.com/rajinifans/status/1750939817867944088

இதனை பெரிய திரையில் திரையிட ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக கைதட்டினர். இந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே தனுஷின் மூத்த மகன், சிறுவயது ரஜினியை போன்று இருப்பதாக புகைப்படங்கள் வைரலான நிலையில், தற்போது 2வது மகளின் மகனும் அச்சு அசல் தாத்தாவை போன்று சல்யூட் அடித்து அசத்தியுள்ளார்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *