Saraswati Yogam: ‘மேஷம் முதல் மீனம் வரை!’ வாழ்கையை புரட்டி போடும் சரஸ்வதி யோகம் யாருக்கு?
ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம் ஆகிய யோகங்களுக்கு மத்தியில் சரஸ்வதி யோகம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஒரு நபரின் ஜாதக கட்டத்தில் இருக்கும் 12 வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டில் “புதன், குரு, சுக்கிரன்” ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றாக இருந்தால் அந்த ஜாதகருக்கு கல்விக்கடவுளான சரஸ்வதியின் அருளாற்றல் நிறைந்த “சரஸ்வதி யோகம்” ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
சரஸ்வதி யோகத்தில் தொடர்புடைய புதன் கிரமானது ‘அறிவின் கிரகம்’ என்று அழைக்கப்படுகிறது. இது கற்றல், பேச்சு, எழுத்து மற்றும் தர்க்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
குரு பகவான் ஞானத்தின் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. இது ஆன்மீகம், தர்மம் மற்றும் தெய்வீக அறிவு ஆகியவற்றுடன் தொடர்புடையது.
சுக்கிரன் கிரமானது அழகு, கலை மற்றும் இன்பத்தின் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. இது கலை, இசை, நடனம் மற்றும் பிற கலை வடிவங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
அதேபோல் குரு, புதன் இதில் ஏதாவது ஒருவர் இரண்டாம் இடத்தில் இருந்தால் ஞானத்தாலே அனைத்தையும் அறியும் திறன் கிடைக்கும் இதுவும் சரஸ்வதி யோகம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
இந்த சரஸ்வதி யோகம் கொண்ட நபர்கள் மிக இளம் வயதிலிருந்தே பல விதமான கல்வி மற்றும் கலைகளை ஆர்வமுடன் பயில்வார்கள் என ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
வயதில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது மற்றும் சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற இங்கிதங்கள் தெரிந்தவர்களாக இந்த சரஸ்வதி யோகம் கொண்டவர்கள் இருப்பார்கள்.