பண மழையில் நனைக்க போகும் ராகு கேது.. உச்சம் செல்ல போகும் ராசிகள்
சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர்.
ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். நிழல் கிரகங்களாக விளங்கக்கூடிய இவர்களை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
இந்நிலையில் ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் இடம் மாற்றம் செய்தனர். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளனர் இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி ஒன்றாம் தேதி அன்று ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திர நட்சத்திரத்திலும் நுழைந்தனர். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
ராகு கேது உங்களுக்கு நன்மைகளை செய்யப்போகின்றனர். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கையில் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் குறையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில். ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
ரிஷப ராசி
ராகு பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ராகு கேது உங்களுக்கு செழிப்பை கொடுப்பார்கள். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வணிகத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
கும்ப ராசி
ராகு பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவார். பனபலத்தில் உங்களை அதிகப்படுத்துவார். திடீரென அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்கும். உங்களுடைய பேச்சால் காரியங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். மற்றவர்களிடத்தில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். ராகு கேது அவ்வப்போது உங்களுக்கு சிக்கல்களை கொடுப்பார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.