சதத்தை தவறவிட்ட ஜடேஜா. 436 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன இந்திய அணி!
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்கள்க்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்களைக் கைப்பற்றினர்.
அதன் பின்னர் ஆடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் 7 விக்கெட்களை இழந்து 421 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியில் சுப்மன் கில் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் மேற்கொண்டு 15 ரன்கள் மட்டுமே சேர்த்த இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் ரவீந்தர ஜடேஜா 87 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி 45 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.